‘இந்த’ 5 ராசிக்காரர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்! யார் அவர்கள்?

12 ராசிக்காரர்களும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தாலும் ஒரு சிலரை நம்பி மட்டும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர்கள் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 25, 2023, 08:49 PM IST
  • ஒரு சில ராசிக்காரர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பர்.
  • கடகம், மகரம் உள்ளிட்ட ராசிகள் லிஸ்டில் உள்ளன.
  • வேறு என்னென்ன ராசிக்காரர்களை நம்பலாம்?

Trending Photos

‘இந்த’ 5 ராசிக்காரர்களை நம்பி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்! யார் அவர்கள்?  title=

எந்த ராசிக்காரர்களை நீங்கள் அதிகம் நம்பலாம் என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா? ஜோதிடம்  என்பது நம்பகத்தன்மையைப் புரிந்துகொள்வதற்கு ஒரு கண்கவர் வழிகாட்டியாக இருந்து வருகிறது. இந்த பதிவில் 5 மிகவும் நம்பகமான ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க. 

1.மகரம்:

மகர ராசிக்காரர்கள் மிகவும் நம்பகமான ராசிகளில் ஒன்றாக முதலிடத்தைப் பெறுகிறார்கள். இவர்கள், பொறுப்புணர்வு மற்றும் ஒழுக்கமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். மகர ராசிக்காரர்கள் நம்பகமான தலைவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் சார்ந்து இருக்கக்கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவைப்படும்போது அவர்களின் வார்த்தையின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு அவர்களை நண்பர்களாகவும் நம்பிக்கைக்குரியவரகவும் ஆக்குகிறது.

2.ரிஷபம்:

நம்பிக்கைக்குரிய இரண்டாவது ராசியான ரிஷபம், நிலைத்தன்மை  மற்றும் நம்பகத்தன்மையை கொண்டுள்ளனர். இவர்கள் பிறருக்கு உதவி புரிவதில் முன்னணியில் இருப்பார்கள். இவர்கள் யாருக்கு நண்பர்களாக இருந்தாலும் விசுவாசமான மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்களாக இருப்பர். ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் பலருக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவர்.இவர்களுடன் பழகுபவர்கள் அனைத்து ரகசியங்களையும் இவர்களிடம் பகிர்ந்து கொள்வர். இவர்கலின் இயல்பு மற்றும் நடைமுறை அணுகுமுறை உங்கள் ஆழ்ந்த ரகசியங்களையும் கட்டவிழ்க்க வைத்துவிடும். அந்த அளவிற்கு பிறரிடம் நல்ல பெயரை இவர்கள் சம்பாதித்து வைத்திருப்பர். 

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்!

3.கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் தங்கள் உன்னிப்பான மற்றும் விவரம் சார்ந்த இயல்பு காரணமாக மூன்றாவது நம்பகமான ராசிக்காரராக இருக்கின்றனர். அவர்களின் நேர்மை மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றார் போல  சிறந்த  நம்பிக்கையாளர்களாக திகழ்கின்றனர். உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது சிந்தனைமிக்க ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவதற்கு நீங்கள் அவர்களை நம்பலாம்.

4.கடக ராசிக்காரர்கள்:

கடக ராசிக்காரர்கள் மிகவும் நம்பகமான ராசிகளுக்குள் ஒன்றாக விளங்குகின்றனர். அவர்களின் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளுணர்வு அவர்களை விசுவாசமான நண்பர்கள் மற்றும் நம்பகத்தன்மை மிகுந்தவராக ஆக்குகிறது. நீங்கள் உணர்ச்சிபூர்வமான ஆதரவைத் தேடுகிறீர்களானால், உண்மையிலேயே அக்கறையுள்ள ஒருவராக கடக ராசிக்காரர்கள் விளங்குவார்கள். இவர்கள் உங்கள் மீது அதே அளவிற்கு நம்பிக்கையும் வைப்பார்கள். 

5.துலாம்:

துலாம் ராசிகாரர்கள், நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றனர். இவர்கள், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பர். ஏதேனும் சிக்கலான சூழலில் நீங்கள் மாட்டிக்கொண்டால் இவர்களிடம் கேட்காலாம். இவர்கள் யாருக்கு என்ன வாக்கு கொடுத்தாலும் அதை கண்டிப்பாக நிறைவேற்றுவர். 

மேலும் படிக்க | அட்சய நவமி 2023: இன்று இந்த பரிகாரங்களை செய்தால் அதிர்ஷ்டம் நிச்சயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News