பணத்தேவைகளை பூர்த்தி செய்யும் கடவுள் மகாலட்சுமி. பெண் தெய்வமான மகாலட்சுமியை முறைப்படி வழிபாடு செய்தால் ஒருவரின் வீட்டில் எப்போதும் செல்வங்கள் வரவு சிறப்பாக இருக்கும். நீங்கள் கடைபிடிக்கும் சில வாஸ்து முறைகள் மகாலட்சுமியை உங்கள் வீட்டிற்கு அழைத்து வரும். மகாலட்சுமி தெய்வத்திற்கு என சில வாஸ்து முறைகள் இருக்கின்றன.
வடக்கு திசையில் மகாலட்சுமி
வாஸ்து முறைப்படி, குப்பைகள் இல்லாமல் தூய்மையாக இருக்கும் வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பார். தூய்மை இல்லாத வீட்டில் அவர் இருக்கவும் மாட்டார். செல்வங்களும் உங்களை தேடி வராது. அதேபோல், வடக்கு திசை மகாலட்சுமிக்கு உகந்த திசை, இந்த திசை வீட்டில் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது வீட்டில் வடக்கு திசையில் எந்தவிதமான கடினமான பொருட்களையும் வைக்க வேண்டாம். அப்பகுதி காலியாக இருந்தால் பணப்பிரச்சனைகள் உங்களுக்கு வராது.
மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!
சமையலறையில் பாத்திரங்கள் கூடாது
சமையலறையில் அசுத்தமான பாத்திரங்களை வைத்திருக்கக்கூடாது. உணவு சமைத்து முடித்தவுடன் உடனடியாக அதனை சுத்தப்படுத்தி வைத்துவிட வேண்டும். இரவு நேரத்தில் அசுத்தமாக வைத்துவிட்டு தூங்கச் செல்லக்கூடாது. அதனை கழுவி வைத்துவிட்டு உறங்கச் செல்லுங்கள். இப்படி செய்தால் உங்களின் மீது மகாலட்சுமியின் அருள் பார்வைபடும்.
துடைப்பம்
மத நம்பிக்கைகளின்படி, துடைப்பத்தில் லட்சுமி தேவி வசிக்கிறாள். துடைப்பம் எப்பொழுதும் யாராலும் பார்க்க முடியாத அத்தகைய இடத்தில் வைக்கப்பட வேண்டும். துடைப்பத்தை வீட்டிற்கு வந்தவர்கள் உறவினர்கள் தொட்டால் பண இழப்பு ஏற்படுமாம். துடைப்பம் அவமானப்படும் வீடுகளில் இருந்து அன்னை லட்சுமி இருக்க மாட்டார்.
மாலையில் விளக்கு ஏற்றவும்
மத நம்பிக்கைகளின்படி, மாலையில் துளசி முன் நெய் தீபம் ஏற்றப்படும் வீட்டில், செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி தேவி எப்போதும் வசிப்பாள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ