இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான அம்பத்தி ராயுடு சில ஆட்டங்களில் பகுதி நேர பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். கடந்த சனவரி 12 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அம்பத்தி ராயுடுவை பந்து வீச்சுமாறு இந்திய கேப்டன் விராட் கோலி உத்தரவிட்டார்.
இதனையடுத்து அம்பத்தி ராயுடு 2 ஓவா்கள் வீசினார். ஆனால் இவரின் பந்து விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாக ஐசிசியிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அடுத்து வரும் 14 தினங்களுக்குள் விதிமுறைகளுக்கு உட்பட்டே தான் பந்து வீசுகிறேன் என்பதை அம்பத்தி ராயுடு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐசிசி கூறியது. இந்த சம்பவத்தை அடுத்து 14 நாட்களுகள் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அம்பத்தி ராயுடு பந்துவீச தடை விதிக்கபடுகிறது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. கிரிக்கெட் விதிக்கு உட்பட்டு தான் பந்து வீசுகிறேன் என்பதை நிருபிக்கும் வரை, அம்பத்தி ராயுடு கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அனுமதிக்கப்பட மாட்டார் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளில் அவர் பந்து வீசுவதில் இந்த தடை பொருந்தாது எனவும் கூறப்பட்டு உள்ளது.
JUST IN: Ambati Rayudu has been suspended from bowling in international cricket.
Details https://t.co/n400JyZJdf pic.twitter.com/0QUfFfmnUs
— ICC (@ICC) January 28, 2019