ICC World Cup 2023: 'இந்த கண்டீஷனுக்கு ஓகே சொன்னா நாங்க இந்தியா வரோம்' - பாகிஸ்தானின் பிளான் என்ன?

ICC World Cup 2023: இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தாங்கள் இந்தியா வர வேண்டுமென்றால், இந்தியா ஒரு நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 7, 2023, 04:07 PM IST
  • இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பரில் உலகக்கோப்பை நடைபெறும் என தகவல்.
  • ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டது.
  • அதில் இந்தியா பங்கேற்காது என தெரிவித்திருந்தது.
ICC World Cup 2023: 'இந்த கண்டீஷனுக்கு ஓகே சொன்னா நாங்க இந்தியா வரோம்' - பாகிஸ்தானின் பிளான் என்ன? title=

ICC World Cup 2023: கிரிக்கெட் ரசிகர்களுக்கு நடப்பாண்டு என்பது அதிகம் தீனிப்போடும் வருடமாக அமைந்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்திய - ஆஸ்திரேலிய பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர், இலங்கை - நியூசிலாந்து தொடர் உள்ளிட்ட டெஸ்ட் தொடர்களால் ரசிகர்கள் மிகவும் திருப்தி அடைந்திருந்தனர். அதனை தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நாளுக்கு நாள் விறுவிறுப்பும், பரபரப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 

இதனால், ஐபிஎல் தொடரை கைப்பற்றப்போவது யார் என்று கணிப்பதற்காக, ரசிகர்கள் இந்த ஒவ்வொரு லீக் போட்டிகளையும் மிக நுணக்கமாக கணித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த கையுடன், ஜூன் மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளதால் இந்த போட்டிக்குமான எதிர்பார்ப்பும் தற்போது உச்சக்கட்டத்தில் இருந்து வருகிறது. 

தொடரும் திருவிழாக்கள்

அதன்பிறகு, அதே இங்கிலாந்தில் வைத்து, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஆஷஸ் தொடரை விளையாட உள்ளன. ஆஷஸ் தொடரான டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களின் மிகவும் விருப்பத்திற்குரிய தொடராக உள்ளதால் இதன்மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும், 50 ஓவர் ஆசியக்கோப்பை தொடரும் இந்தாண்டு நடைபெறுகிறது. இவையெல்லாவற்றையும் விட, அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தான், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பேவரட் லிஸ்டில் தவறாமல் இடம்பிடித்திருக்கும். 

மேலும் படிக்க | சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி... உலகக்கோப்பைக்கு ரெடியா மக்களே!

இந்த உலகக்கோப்பை இந்தியாவில் நடப்பதால், இந்திய ரசிகர்கள் குதூகலத்துடன் உள்ளனர். ஏனென்றால், கடைசியாக இந்தியாவில் நடந்த 2011 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி தான் கைப்பற்றியது. மேலும், இந்த உலகக்கோப்பை தொடர், விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு கடைசி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்பதால், கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையே போலவே இதையையும் இந்திய அணி வெல்லும் என மிகுந்த நம்பிக்கை உடன் காத்திருக்கின்றனர்.

ஆசிய கோப்பையும்... உலகக்கோப்பையும்... 

அதிலும், உலகக்கோப்பை என்றால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி படு ஃபயராக இருக்கும் என கூறப்படுவது உண்டு. ஆனால், அதற்கு இந்த முறை பெரிய இடைஞ்சல்கள் உள்ளன. 50 ஓவர் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டதால், அதில் இந்தியா கலந்துகொள்ளாது என தெரிவித்திருந்தது. எனவே, ஆசிய கோப்பையில் விளையா இந்திய அணி, பாகிஸ்தான் வராவிட்டால் உலகக்கோப்பையை விளையாட இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி வராது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. 

எழுத்துப்பூர்வ உத்தரவாதம்

இதில், பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தெரிகிறது. இந்நிலையில், 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை விளையாட பாகிஸ்தான் அணி, இந்தியா வருவதற்கு சில நிபந்தனைகளை விதிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார். அதாவது, வரும் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் வர ஒப்புக்கொண்டு எழுத்தப்பூர்வ உத்தரவாதம் அளித்தால், இந்தாண்டு நடைபெறும் உலக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்க தயார் என கூறியுள்ளார்.

துபாய் பயணம்

ஆசிய கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் வாரியத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள சேதி துபாய் செல்ல  உள்ளதாக தெரிகிறது. அந்த பயணத்திலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக உள்ள நஜாம் சேதி இந்த நிபந்தனையை முன்வைப்பார் என தெரிகிறது. உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெற அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. 

மேலும் படிக்க | கிரிக்கெட் விளையாட்டுக்கு தேய்பிறை காலம் இது! டி20 லீக்குகளால் கிரிக்கெட்டுக்கு ஆபத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News