ICC World Cup 2023: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி மாபெரும் வெற்றிகளுடன் தொடங்கியுள்ளது எனலாம். மொத்தம் 10 அணிகள் மோதும் இந்த தொடரில் அனைத்து அணிகள் தலா 9 போட்டிகளில் அதாவது அனைத்து அணிகளையும் தலா 1 முறை விளையாட உள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் உடன் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடனும் எளிதாக வெற்றியை குவித்துள்ளது.
இந்தியா ஹாட்ரிக் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினாலும் டாப்-ஆர்டர் என்பது சீட்டுக்கட்டாக சரிந்தது. இருப்பினும், விராட் கோலி, கேஎல் ராகுலின் அசத்தலான பார்ட்னர்ஷிப் அன்று இந்திய அணியை காத்தது. அதேபோல் நேற்றைய போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டும் உலகத் தரத்தில் வெளிப்படவே இந்தியா எளிதாக பாகிஸ்தானையும் வீழ்த்தியது. எனவே, எதிர்வரும் அடுத்த 6 போட்டிகளும் அதிக விறுவிறுப்பை பெற்றுள்ளன.
இந்தியா தனது அடுத்த போட்டியில் வங்கதேச அணியை (IND vs BAN) வரும் அக். 19ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதன்பின், 22ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெற மிக முக்கிய போட்டிகள் என்பது நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுடன் மோதும் போட்டிகள் ஆகும். இந்தியா தற்போது அதிக நெட் ரன்ரேட் உடன் முன்னிலையில் உள்ளது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் அடுத்த இடத்தில் உள்ளன.
மேலும் படிக்க | உலக கோப்பை 2023: இந்த 4 டீம் அரையிறுதி கன்பார்ம்! அடித்துச் சொல்லும் ரசிகர்கள்
தீர்க்கப்படாத பிரச்னை
இதனால், இந்திய அரையிறுதிக்கு வர அந்த மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில், இந்திய அணி இன்னும் சில இடங்களில் தன்னை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். நடப்பு உலகக் கோப்பையில் டாப், மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சரியாக அமைந்துவிட்டாலும் கீழ் வரிசை பேட்டர்களான ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) ஆகியோரின் பேட்டிங் இன்னும் சோதிக்கப்படவில்லை எனலாம். குறிப்பாக இதில் ஷர்துலின் இடம் குறித்த கேள்விகள் அதிகம் உள்ளன.
ரோஹித் அவுட்டான உடன்...
இதுகுறித்து இந்திய அணியின் மூத்த வீரர் ஆஷிஷ் நெஹ்ரா (Ashish Nehra) கூறுகையில், "பாகிஸ்தான் உடனான போட்டியில், ரோஹித் சர்மா ஆட்டமிழந்த போது, இந்தியாவின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நிலையில், இந்திய அணி கே.எல். ராகுலுக்கு பதில் ஷர்துல் தாக்கூரை பேட்டிங் செய்ய அனுப்பியிருக்கலாம் என்று நான் கூறுவேன். ஷர்துல் விளையாடுவாரா அல்லது அஷ்வினா அல்லது ஷமி அணிக்குள் வர வேண்டுமா என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. நீங்கள் அவரை எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்து ரன்களை கொண்டு வர வேண்டும் என விளையாடுகிறீர்கள் என்றால், நீங்கள் அவருக்கு மிடில்-ஆர்டரிலும் சற்று வாய்ப்பை வழங்கலாம்" என அறிவுரை கூறினார்.
அழுத்தத்தில் விளையாடுவது முக்கியம்
மேலும் பின் வரிசை பேட்டர்கள் குறித்து மற்றொரு இந்திய மூத்த வீரர் சேவாக் (Sehwag),"இந்தியா பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறந்து விளங்கியது. ஆனால் ஹர்திக் மற்றும் ஜடேஜா போன்றவர்களுக்கு பேட்டிங் செய்யவும் சில வாய்ப்பை கொடுத்திருக்கலாம். உங்களின் முதல் நான்கு பேட்டர்கள் தொடர்ந்து ரன்களை குவித்து வரும் நிலையில், திடீரென ஒருநாள் அவர்கள் ஆட்டமிழக்கும் சூழ்நிலையில், உங்கள் கீழ் மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட வேண்டும். நீங்கள் வலைகளில் எவ்வளவு பயிற்சி செய்தாலும் நேரடியாக போட்டியில் அதுவும் அழுத்தத்தின் கீழ் விளையாடுவதுதான் மிக முக்கியமானது" என்றார்.
எனவே, அடுத்தடுத்த போட்டிகளில் சற்று சௌகரியமான சூழல் பேட்டிங்கில் ஏற்படும் போது, இந்திய அணி தனது பேட்டிங் ஆர்டரை மாற்றிமைப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. இது அடுத்த வங்கதேச போட்டியிலும் பரிசோதித்து பார்க்கலாம் என்பதும் பலரின் பார்வையாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ