ICC உலக கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
ICC உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 17-வது லீக் ஆட்டம் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டௌன்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.
இதனையடத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அணியில் அதிகப்பட்சமாக டேவிட் வார்ணன் 107(111), அரோன் பின்ச் 82(84) ரன்கள் குவித்தனர். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் ஆட்டத்தின் 49-வது ஓவரில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
பாகிஸ்தான் தரப்பில் மொகமது அமிர் 5 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக துவக்க வீரர் ஜாமன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். எனினும் மறுமுனையில் இமாம் உல் ஹக் 53(75) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இவருக்கு துணையாக மொகமது ஹப்பீஸ் 46(48), சப்ரஸ் அகமது 40(48), வாஹப் ரியாஜ் 45(39) ரன்கள் குவித்தனர். எனினும் ஆட்டத்தின் 45.4-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பாகிஸ்தான் அணி 266 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.