உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடைபெறும் நாள் கால்பந்தாட்ட ரசிகர்களின் கொண்டாட்ட நாளாகும், இந்த நாளில் மைதானத்திற்கு சென்று போட்டியை பார்க்கும் பலரும் மதுவை விரும்பி அருந்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது கத்தாரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் பார்வையாளர்கள் அதுபோன்று செய்யமுடியாது, கத்தார் அரசு அவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக பார்வையாளர்கள் மைதானத்தில் பீர் குடிக்கக்கூடாது என கத்தார் அரசு அறிவித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கத்தாரில் மதுபானம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது, அங்கு வரும் பயணிகளிடம் மது இருந்தால் கூட அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிடுவார்கள். இப்போது பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
மேலும் படிக்க | இந்த சாதனைகள் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை: ஜெகதீசனை நீக்கிய சிஎஸ்கே!
1) பொதுவாக கத்தாரில் பொது மக்கள் மது அருந்துவது சட்டவிரோதமானது, ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் $800க்கும் அதிகமான அபராதமும் விதிக்கப்படும். அதேபோல நாட்டிற்கு மதுவை கடத்தும் நபர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது நடைபெறப்போகும் கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டியின் மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் யாரும் மது அருந்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
2) கத்தார் நாடு ஒரு அதிகாரபூர்வ இஸ்லாம் நாடு என்பது அனைவருக்கும் தெரியும், அதனால் இங்கு வரும் பார்வையாளர்கள் பிற மதங்களுக்கு மதமாற்றம் செய்வது அல்லது இஸ்லாத்தை விமர்சிப்பது போன்ற ஏதேனும் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
3) மதுபானம் மற்றும் ஆபாசப்படங்களுக்கு அரசு தடை விதித்திருக்கிறது, மேலும் நாட்டுக்குள் யாரும் பன்றி இறைச்சிகளை கொண்டு வரவும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
4) எவரேனும் கத்தார் அரசை விமர்சிக்கும்படியாக பேசினால் அவர்கள் கைது செய்யப்படலாம், வாயால் பேசினாலும் சரி, சமூக ஊடகம் வாயிலாக விமர்சித்தாலும் அவர்கள் மீது சட்டம் பாயும். உதாரணமாக, பொது இடங்களில் மற்றவர்களுடன் வாதிடுவது அல்லது அவமதிப்பது போன்றவற்றை பார்வையாளர்களால் செய்தால் கைது செய்யப்படுவார்கள்.
5) கத்தாரில் ஓரினச்சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இங்கு LGBTQ மக்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. அதேபோல அநாகரீகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு வைத்திருப்பவர்களுக்கு கடுமையாக தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதனால இங்கு வரும் பார்வையாளர்கள் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்டு உறவு கொள்ளும் ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
6) கர்ப்பிணி பெண்கள் உலகக்கோப்பை போட்டியை காண சென்றால் அங்கு அவர்களுக்கு மகப்பேறுக்கு முற்பட்ட பராமரிப்பு தேவைப்பட்டால், திருமணச் சான்றிதழைக் காட்ட அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
7) போட்டியை காண வரும் பார்வையாளர்கள் அங்கு எவ்வளவு வெப்பமாக உணர்ந்தாலும் தனது உடலை முழுமையாக மறைக்கும்படியான ஆடைகளை தான் அணியவேண்டும் என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பல பொது இடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது தோள்பட்டைகள், மார்புகள், வயிறுகள் மற்றும் முழங்கால்களை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணியவேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க | FIFA 2022: 4 கோல் வித்தியாசத்தில் ஈரானை தோற்கடித்த இங்கிலாந்து கால்பந்து அணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ