இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
ராகுல் 40 ரன்னும், தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 140 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் அரை சதமடித்து அவுட்டானார். நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் கில்லின் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
A brilliant for @ShubmanGill
His maiden in international cricket.
Well played, Shubman #ZIMvIND pic.twitter.com/98WG22gpxV
— BCCI (@BCCI) August 22, 2022
முன்னதாக இரு அணிகளுக்கிடையில் கடந்த 18ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடந்தது. அதில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1- 0 என்கிற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஜிம்பாப்வே அணி 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் சர்த்துல் தாகூர் 3 விக்கெட்களையும், சிராஜ், கிருஷ்ணா, அக்சர், குல்தீப், ஹூடா தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர். 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரையும் இந்தியா வென்றது. இன்றைய போட்டியிலும் இந்தியா வெல்லும்பட்சத்தில் ஜிம்பாப்வே ஒயிட் வாஷ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ