ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பரிதாப தோல்வி அடைந்தது!
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. முன்னதாக கடந்த பிப்., 24-ஆம் நாள் நடைப்பெற்ற முதல் 20 ஓவர் கிரிகெட் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்றது.
An outstanding knock of 113* from Maxwell guides the visitors to a 7-wkt victory in the second T20I.
Australia win the series 2-0 #INDvAUS pic.twitter.com/CAdMFQdBa5
— BCCI (@BCCI) February 27, 2019
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து இந்தியா தரப்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 47(26), சிகர் தவான் 14(24) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72(38) ரன்கள் குவித்தார். மறு முனையில் அவருக்கு ஆதராவக மகேந்திர சிங் தோனி 23 பந்துகளில் 40 ரன்கள் குவித்து இறுதி ஓவரில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 3 பந்துகளில் 8 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார்.
இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 190 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆர்கி ஷாட் 40(28) ரன்கள் குவித்து வெளியேறினார். மறுமுனையில் மார்க்கஸ் ஸ்டோனிக்ஸ் 7(11), ஆரோன் பின்ச் 8(7) ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர், இவர்களை அடுத்த களமிறங்கிய கெளன் மேக்ஸ்வெல் இப்போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 55 பந்துகளில் 113 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இவருக்கு துணையாக பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் 20(18) ரன்கள் குவித்து ஆட்டத்தின் 19.4-வது பந்தில் வெற்றி இலக்கை எட்டி 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.