லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் (IND vs ENG) லாட்ஸ் மைதானத்தில் இந்தியாவிற்கு ஒரு வரலாற்று டெஸ்ட் வெற்றி கிடைத்திருக்கிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. தற்போது இந்த மைதானத்தில் லாட்ஸ் வெற்றியின் மூலம் கபில்தேவ், தோனி வரிசையில் கோலியும் புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டி சமநிலையில் முடிந்தது. இதையடுத்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளுக்குமிடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் நங்கூர தொடக்கத்தை ஏற்படுத்தினர். கே.எல்.ராகுல் அபாரமான சதம் அடித்தார். ரோகித் சர்மா சதம் அடிக்கும் முன்னரே விக்கெட்டை இழந்தார். அதன்படி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை குவித்தது இந்திய அணி.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியும் இந்திய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நெருங்கி வந்து அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 381 ரன்களை திரட்டியது. 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.
இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்தார் கேப்டன் கோலி. இதன் மூலம் 272 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இந்நிலையில் இங்கிலாந்து அணியை வெறும் 120 ரன்களுக்கு சுருட்டி 151 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியை இந்திய அணி வென்றது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றிருக்கிறது.
ALSO READ | England vs India: 2வது டெஸ்ட் போட்டி கே.எல் ராகுல் செய்த சாதனை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR