10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி புனே அணி வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் ஐபிஎல் 2-வது லீக் போட்டியில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
புனே அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணியில் பார்த்தீவ் பட்டேல், பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். மும்பை அணி 4.2 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பார்த்தீப் பட்டேல் 14 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
மும்பை அணியின் கடைசி கட்ட அதிரடியால் கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் திரட்ட மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. இதனால் புனே அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 34 ரன்களில் 60 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஸ்மித் சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாச அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 19 ஓவரின் 5 வது பந்தில் 187 ரன்களை எடுத்து புனே அணி வெற்றியை எட்டியது. ஸ்மித் 54 பந்துகளுக்கு 84 ரன்களை குவித்தார்.
#IPL Match 2: @RPSupergiants win by 7 wickets. MI 184/8 vs. RPS 187/3, Smith (84 off 54), Rahane (60 off 34), Tahir 28/3 #RPSvMI pic.twitter.com/vMl2LVKLcd
— IndianPremierLeague (@IPL) April 6, 2017