இந்தியன் பிரீமியர் லீக்கின் நிர்வாகம், தொற்று பரவாமல் தடுக்க, போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் அனைத்து உருப்பினர்களையும் பயோ பபிள் என்ற பாதுகாக்கப்பட்ட வட்டத்திற்குள் வைத்திருந்தது. எனினும், இந்த பாதுகாப்புக்குக் கிடைத்துள்ள பெரிய அடியாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இரு வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சமீபத்தில் தோள்பட்டை ஸ்கேன்களுக்கான பயோ பபிளிலிருந்து வருண் சக்ரவர்த்தி வெளியேறினார் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே CSK பந்துவீச்சு பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸின் உறுப்பினர்கள் சிலருக்கு தொற்று உறுதியானது. இதனால், IPL நிர்வாகத்தின் பிரச்சனை அதிகரித்தது.
இதன் பிறகு CSK அணியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என நம்பப்படுகின்றது. இதன் காரணமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான CSK-வின் ஆட்டம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த போட்டி புதன்கிழமை புது தில்லியில் நடக்கவுள்ளது. ஆனால், இந்த போட்டியும் இப்போது ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
சமீபத்திய புதுப்பிப்பு என்ன?
"இப்போதைக்கு, மும்பை இந்தியன்ஸுக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் இடையிலான டெல்லி ஆட்டம் திட்டமிட்டபடி நடக்கும். ஆனால் CSK-வின் லட்சுமிபதி பாலாஜிக்கு தொற்று உறுதியாகியுள்ளதால், நாளைய ஆட்டம் ஒத்திவைக்கப்படலாம். இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளில் தொற்று குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன" என்று BCCI அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ALSO READ: உயிரோட விளையாடாதீங்க, IPL ஐ உடனடியாக நிறுத்துங்க, முன்னாள் வீரர் கோரிக்கை
சிஎஸ்கே என்ன விரும்புகிறது?
ஊடக அறிக்கையின் படி, CSK உரிமையாளர்கள், தங்களது அடுத்த ஆட்டத்தை தாங்கள் ஆட விரும்பவில்லை என BCCI-க்கு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அனைத்து வீரர்களும் 6 நாட்களில் மூன்று கொரோனா சோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடன்தான் போட்டிகளில் ஆட முடியும் என அணி கருதுவதாகக் கூறப்படுகிறது.
“பயிற்சியாளருக்கு அறிகுறிகள் இல்லை. இருப்பினும், பி.சி.சி.ஐயின் கோவிட் நெறிமுறைகளின்படி, அவருடன் தொடர்பு கொண்ட ஒவ்வொருவரும் ஆறு நாள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருக்கும். ஆகையால் எங்கள் அடுத்த ஆட்டத்தை (ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக) விளையாட முடியாது. சோதனை நெறிமுறைகளைப் பற்றி பி.சி.சி.ஐக்குத் தெரியும். தொடர்பில் வந்த அனைவருக்கும் எத்தனை முறை சோதனை நடத்தப்பட வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. நாங்கள் பி.சி.சி.ஐ.க்கு இதைப் பற்றி தெரிவித்துள்ளோம். சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஆட்டத்தை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று ஒரு சிஎஸ்கே அதிகாரி தெரிவித்தார்.
பாதுகாப்பு குமிழிலிருந்து வைரஸை அகற்றுவதற்காக, பி.சி.சி.ஐ சில மாற்றங்களைச் செய்துள்ளது. வீரர்கள், நடுவர்கள் மற்றும் மேட்ச் அதிகாரிகள் ஜிம்மை பயன்படுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளார்கள். அறைகளுக்கே உணவை வரவழைக்கும்படியும் வீர்ரகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
"இப்போது ஆட்டங்களை ஒத்திவைப்பதோ அல்லது மாற்றுவது கடினமாக இருக்கும். எங்கள் பயோ பபிளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து மருத்துவ குழுக்களுடன் பேசுகிறோம். அணிகளை தினமும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். வீரர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு தீர்வுகளை கண்டுபிடிக்க நாங்கள் முயற்சிக்கிறோம், ” என்று பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ALSO READ: தொடரும் கொரோனா தாண்டவம்: 24 மணி நேரத்தில் சுமார் 3.57 லட்சம் பேர் பாதிப்பு, 3449 பேர் பலி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR