நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. ஊள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் அணி 153 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் அந்த அணியில் சோபிக்காத நிலையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். ஷார்ட், பனுகா ராஜபக்ச, சாம் கரன் ஆகியோர் சராசரியாக 20 ரன்களுக்கு மேல் எடுத்தனர். இதனால் கவுரமான ஸ்கோரை எட்டியது பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்தில் அதிரடியாக ஆடினாலும், மிடில் ஓவர்களில் அந்த அணியால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை எடுக்க முடியவில்லை.
மேலும் படிக்க | PBKS vs GT: பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய குஜராத் டைட்டன்ஸ்
பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசியது அந்த அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இருப்பினும் சுப்மான் கில் அரைசதம் அடித்து அந்த அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்துவிட்டதால், பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக ரிஸ்க் ஏதும் எடுக்காமல் விளையாடினர். முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ஒரு விக்கெட்டை இறுதி நேரத்தில் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி எடுத்திருந்தாலும் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் விளையாடியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
நான்கு போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது. 2 வெற்றிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது பஞ்சாப் அணி. இந்த போட்டியில் குஜராத் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஹர்திக் பாண்டியாவுக்கு தலைவலியாக அமைந்துவிட்டது. ஏனென்றால், குறித்த நேரத்தில் பந்துவீசாததால் அவருக்கான போட்டிக் கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்றதொரு தவறு மீண்டும் நடந்தால் ஹர்திக் பாண்டியா ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படிக்க | ஏம்பா ரபாடா.. வந்த உடனே சாதனையா? மலிங்கா ரெக்கார்டு காலி - இனி இவர் நம்பர் ஒன்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ