கடந்த மாதம் செப்டம்பர் 17ம் தேதி நியூசிலாந்து அணி பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட போட்டிகளில் விளையாட இருந்த நிலையில், முதல் ஒரு நாள் போட்டி தொடங்க இருந்த சில மணி நேரங்களுக்கு முன் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானை விட்டு வெளியேறியது நியூசிலாந்து அணி. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
நியூசிலாந்து வீரர்களுக்கு அதிகப்படியான பாதுகாப்பு வழங்கப்பட்டதாக பாகிஸ்தான் நிர்வாகம் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்டில் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, "சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது ஏமாற்றமாக இருந்தது. உலக கோப்பை போட்டிக்கு முன்பு பாகிஸ்தான் அணியுடன் விளையாட எதிர் பார்த்து காத்திருந்தோம். ஆனால் நிலைமை இப்படி ஆகி விட்டது. பாகிஸ்தான் தங்கள் நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மிகுந்த சிரமப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்தும் சரியாகி மீண்டும் அங்கு விளையாடுவோம் என்று எதிர்பார்க்கிறேன்.
வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரியவந்ததும் அவர்களது குடும்பங்களை கவலையடையச் செய்தது . நாங்கள் பாகிஸ்தானில் இருப்பதில் மிகவும் உற்சாகமாக இருந்தோம். நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்ததாக உணர்ந்தோம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எங்களை நன்கு கவனித்து கொண்டனர். அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும், குறிப்பாக பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு சுற்றுப்பயணம் ரத்து செய்யபட்டது மிகவும் வருத்தமாக இருந்திருக்கும் என்பதை உணர்கிறேன். மீண்டும் சர்வதேச அணிகள் அங்கு சுற்றுப்பயணம் செய்ய எவ்வளவு காலம் ஆகும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று கூறினார்.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 26 ஆம் தேதி ஷார்ஜாவில் உலக கோப்பை போட்டியில் மோதுகின்றன.
ALSO READ டி20 உலகக் கோப்பை: வீரர்களை கண்காணிக்க ஐசிசியின் புதிய முடிவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR