இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி போட்டியையும் வென்றதில்லை. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 50 ஓவர் உலககோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை நடைபெறுவதால், இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீது இருக்கிறது. இதனையொட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முக்கிய அறிவுரை ஒன்றை ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு வழங்கியுள்ளார்.
சவுரவ் கங்குலி அறிவுரை
எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, 'இந்தியா ஒரு பலவீனமான அணியாக இருக்க முடியாது. இவ்வளவு திறமைகளை கொண்ட நாடு, அதன் அணி பலவீனமாக இருக்க முடியாது. பாதி வீரர்களுக்கு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இதனால், நிச்சயம் இந்திய அணியால் உலக கோப்பையை வெல்ல முடியும். அதுவரை ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரோகித் கூறிய ஒரு ’பாயிண்ட்’ - கேப்டன்ஷிப்பை இழந்த விராட்
மேலும், உலகக் கோப்பையில் இந்திய அணி எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாட வேண்டும் என்று கூறியுள்ள அவர், கோப்பையை வெல்வார்களா? இல்லையா? என்பதை கூற முடியாது. அதேநேரத்தில், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ள அணியாக இந்தியா இருக்கிறது. இதனால் நல்ல முடிவை நிச்சயம் எதிர்பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
இந்திய அணி கடைசியாக எம்.எஸ்.தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பிறகு எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. 2017 ஆம் ஆண்டு சாம்ப்யன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.
மேலும் படிக்க | ரோகித் ஷர்மாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், வைரலாகும் Video!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ