இந்தியா - இலங்கைக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் விஷவா பெர்னாண்டோ பந்தில் கேட்ச் அவுட் ஆனார்.
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 375 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சதம் அடித்தனர்.
இலங்கை அணிகவெற்றி பெற 376 ரன்கள் இலக்கு தரப்பட்டது. ஆனால் இலங்கை அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தெர்தேடுக்கப்ட்டார்.
விராத் கோலி 96 பந்தில் 131 ரன்கள் எடுத்து மலிங்கா பந்தத்தில் அவுட் ஆனார். இது லசித் மலிங்காவின் 300_வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிராக விராட் கோலி அடிக்கும் 7_வது சதமாகும். இதுவரை விராத்கோலி 29 சதம் அடித்துள்ளார். இதன்மூலம் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் 3_வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சச்சின்(49 சதம்), 2_வது இடத்தில் ரிக்கிபாண்டிங்(30 சதம்) உள்ளனர்.
இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.