நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று தருவாரா இந்திய அணியின் வீரர்

நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணியை தனி ஒருவனாக வெற்றி பெற வைக்கும் ஒரு வீரர் இருக்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2021, 10:55 AM IST
நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று தருவாரா இந்திய அணியின் வீரர் title=

துபாய்: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எப்படியும் வெற்றி பெற வேண்டும். இந்த ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய வீரர் ஒருவர் நியூசிலாந்தை வீழ்த்துவார். இந்த வீரர் மிகவும் ஆபத்தானவர் என்றே கூறலாம். 

இந்திய அணியின் இந்த வீரர் 'மேன் ஆஃப் தி மேட்ச்' போட்டியாளர்
நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணியை (T20 World Cup) தனி ஒருவனாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய ஒரு வீரர் இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான இந்த சிறப்பான ஆட்டத்தில், 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்தே கூறலாம். இந்திய அணியின் வெற்றியில் ரோஹித் சர்மாவின் பங்கு அதிகம்.

ALSO READ |  ஹர்பஜன் - முகமது அமீருக்கு இடையே கடுமையான கருத்து மோதல்; வைரலாகும் ட்வீட்

நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் சாதனை
அரையிறுதிக்கு முன்னேறும் வகையில் இந்த போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால், டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்தை இந்தியாவால் ஒருபோதும் வீழ்த்த முடியவில்லை. நியூசிலாந்துடன் 2 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் 2007 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. கடைசியாக 2016 உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது, ​​இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.

இந்தியா வரலாற்றை மாற்ற விரும்புகிறது
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இந்த போட்டி கடுமையாக இருக்கும். இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு இது. அதனால் நியூசிலாந்துக்கு அணியை வீழ்த்தி வரலாற்றை மாற்ற இந்திய அணி விரும்புகிறது.

நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் லெவன்
கேஎல் ராகுல்
ரோஹித் சர்மா (துணை கேப்டன்)
விராட் கோலி (கேப்டன்)
இஷான் கிஷன்
ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
ஆர் அஸ்வின்
ஷர்துல் தாக்கூர்
ஜஸ்பிரித் பும்ரா
முகமது ஷமி

ALSO READ |  முகமது ஷமி குறித்து அவதூறு - வெட்கக்கேடானது என கம்பீர் கண்டனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News