ஹோட்டல் அறையில் தனது தனியுரிமை ஆக்கிரமிக்கப்பட்டதாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. டி20 உலகக் கோப்பை நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோட்டல் அறையில் ரசிகர் ஒருவர் விராட் கோலியின் அறைக்குள் நுழைந்து வீடியோ பதிவு செய்துள்ளார். இதனால் கடுப்பான முன்னாள் இந்திய கேப்டன் கோலி தனது இன்ஸ்டாகிராமில் அந்த ஹோட்டல் அறையின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது அவரது தனியுரிமை குறித்து மிகவும் சித்தப்பிரமையாக இருப்பதாகக் கூறினார்.
மேலும் படிக்க | தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி! இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோகிறதா?
"ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் மற்றும் அவர்களைச் சந்திப்பதில் உற்சாகம் அடைகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், அதை நான் எப்போதும் பாராட்டுகிறேன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ திகைக்க வைக்கிறது, இது எனது தனியுரிமையைப் பற்றி என்னை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. எனது சொந்த ஹோட்டல் அறையில் என்னால் தனியுரிமை இருக்க முடியாவிட்டால், நான் உண்மையில் எந்த தனிப்பட்ட இடத்தையும் எங்கு எதிர்பார்க்க முடியும்? இந்த வகையானது எனக்கு சரியில்லை. தயவு செய்து மக்களின் தனியுரிமையை மதிக்கவும், அவர்களை பொழுதுபோக்கிற்கான பொருளாக கருத வேண்டாம்." என்று கோஹ்லி பதிவிட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் வென்ற பிறகு, தென்னாப்ரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது. மீதம் உள்ள 2 போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில் எளிதாக அரையிறுதிகுள் நுழைய முடியும். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி ஆரம்பத்தில் ரன்கள் அடிக்க தவறியது. சூரியகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மேலும் படிக்க | ICC T20 World Cup - IND vs SA : கோட்டைவிட்ட இந்தியா... உலகக்கோப்பையில் முதல் தோல்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ