இரண்டு நாட்களில் பல்டி அடித்த மாபா பாண்டிய ராஜன் - நம்பிய ஓ.பி.எஸ் ஷாக்

ஓபிஎஸ்ஸூக்கு அதரவு கொடுத்த மாபா.பாண்டியராஜன், இரண்டே நாட்களில் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து அவருக்கு அதரவு தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 21, 2022, 04:02 PM IST
  • இரண்டு நாட்களில் அணி தாவிய மாஃபா பாண்டியராஜன்
  • எடப்பாடி பழனிசாமிக்கு காலில் விழுந்து நேரில் ஆதரவு
  • அதிமுக ஒற்றைத் தலைமைக்கு பொருத்தமானவர் என புகழாரம்
இரண்டு நாட்களில் பல்டி அடித்த மாபா பாண்டிய ராஜன் - நம்பிய ஓ.பி.எஸ் ஷாக் title=

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், அதற்கு எடப்பாடி பழனிசாமியே சரியானவர் என்றும் கோரிக்கைகளை வைக்க, அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அதிமுக தலைமை அலுவலகம், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் வீடுகள் பரபரப்பாக இருக்கின்றன. பொதுக்குழு கூட்டம் இன்னும் நடக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.

அதிமுகவின் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெரும்பாலானோர் தங்களின் ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஒற்றைத் தலைமையை நிராகரிக்கும் ஓ.பன்னீர்செல்வம், கலவரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் இந்தக் கருத்தை வலியுறுத்தி இருக்கின்றனர். 

மேலும் படிக்க | 'ஓ.பி.எஸ் பின்னால் மன்னார்குடி கம்பெனி' - அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி குற்றச்சாட்டு

ஆனால், ஓபிஎஸ் குழுவின் கோரிக்கையை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழு கட்டாயம் நடைபெறும் என அறிவித்து அதற்கான பணிகளில் களமிற்கியுள்ளது. மேலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் தங்கள் பக்கம் இழுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. 15 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 8 ஆக குறைந்துள்ளது. இதில், ஓபிஎஸ்ஸூக்கே ஷாக்கான விஷயம் என்னவென்றால், மாஃபா பாண்டியராஜனின் அணி தாவல் தான்.

ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியபோது கூட இருந்தவர்களில், ஒருவர் கூட இப்போது அவருக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென தன்னுடைய ஆதரவை தெரிவித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்று எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த அவர், காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. இப்போது, ஒபிஎஸ் அணியின் பலம் வெகுவாக குறைந்திருப்பதால், அடுத்து என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை அதிமுகவினரும் அரசியல் நோக்கர்களும் எதிர்நோக்கியுள்ளனர். 

மேலும் படிக்க | ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் : இருவருக்கும் செக் வைத்த கட்சி உறுப்பினர்கள்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News