AIADMK Edappadi Palanisamy: தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில்,"இருக்கை விவகாரம் சட்டப்பேரவை தலைவருக்கு உட்பட்டது என்றாலும் துணைத் தலைவர் என்பது தலைவர் இருக்கைக்கு அருகில் அமர வேண்டிய இடம், அது கொடுக்கப்பட வேண்டும். அதை ஏன் ஒதுக்க மறுக்கின்றீர்கள்" என்று பேசினார். எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனோஜ் பாண்டியன் (ஓபிஎஸ் ஆதரவாளர்) எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டார்.
அப்பாவு பதில்
தொடர்ந்து, அதிமுக (AIADMK) சட்டப்பேரவை உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை 66இல் இருந்து 63 ஆக குறைக்குமாறு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சி தலைவர் கேள்வி கேட்க உரிமை இல்லை என்றும் இருக்கைகளை ஒதுக்குவது தனது தனிப்பட்ட உரிமை என்றும் சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.
தொடர்ந்து,"ஒருவர் எந்த சின்னத்தில் வென்று சட்டசபைக்கு வருகிறாரோ, அதே சின்னத்தில் தான் கடைசி வரை பார்ப்பேன். இருக்கை விவகாரத்தில் சட்டப்படியே நடக்கிறேன். வீம்புக்காக எதையும் செய்யவில்லை. யாருக்கும் சிறு மனக்குறை வரக்கூடாது என்றுதான் இந்த அவையை நடத்தி வருகிறேன்" என்று அப்பாவு பதிலளித்தார். இருப்பினும், அப்பாவுக்கு எதிராக அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | மதுரையில் என்.ஐ.ஏ திடீர் சோதனை! அதுவும் இவரது வீட்டில்!
இபிஎஸ் கொந்தளிப்பு
இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), "சட்டபேரவையில் அதிமுக எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை குறித்தும், மூன்று சட்டமன்ற உறுப்பினர் நீக்கம் தொடர்பாக கடிதம் கொடுத்து எந்த நடவடிக்கைளும் எடுக்கவில்லை. 10 முறை நினைவூட்டும் கடிதத்தை கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரைக்கும் எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை
காங்கிரஸ் கட்சியில் 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலைவர், துணைத் தலைவர் அனைவருக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுக்கின்றனர். ஆனால் எங்களுக்கு கொடுக்கவில்லை. அதிமுக சட்டமன்ற துணை தலைவரை முறைப்படி நியமிக்கவில்லை, உரிய இருக்கையையும் கொடுக்கவில்லை. பெரும்பாலான கேள்விக்கு முதல்வரோ அல்லது அமைச்சரோ பதில் செல்வதில்லை மாறாக சபாநாயகரே பேசி விடுகிறார். அதனால், எங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர் மற்றும் முதல்வரின் பதிலை பெறமுடியவில்லை" என்றார்.
பாஜக வெளிநடப்புக்கு என்ன காரணம்?
முன்னதாக, அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பிற்கு எதிர்ப்பு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் அவையில் இருந்தும் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து, வானதி ஸ்ரீனிவாசன் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில்,"இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை என்பது வாக்கு வங்கிக்காக திமுக அரசின் செயல்பாடாகும். இந்த விவகாரம் கோவையில் நீண்ட அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பை திமுக அரசு சிலிண்டர் வெடிப்பு விபத்து என்கிறது. ஆனால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கிறது. சிறைவாசிகள் விடுதலை, கோவையில் அமைதியை பாதிக்கும். எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். இந்துக்கள் குரலை பதிவு செய்ய கவன ஈர்ப்பு கொண்டுவந்தோம். அது ஏற்றுக்கொள்ளப்படாததாலும் தன்னை முழுமையாக பேசவிடாத்தாலும் வெளிநடப்பு செய்தோம்" என்றார்.
மேலும் படிக்க | கொடநாடு வழக்கில் இபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச நிரந்தர தடை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ