Tamil Nadu Pongal News In Tamil: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் அதன் அடிப்படையில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கான சிறப்புத் தொகுப்பு குறித்து இப்போதே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட ஆரம்பித்துவிட்டது ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்படும் நடைமுறைதான் மக்களின் இந்த ஆர்வத்துக்கு காரணமாக இருக்கிறது.
ஆனால் இந்த ஆண்டும் ₹1000 வழங்கப்படுமா அல்லது ஏற்கனவே கொடுக்கப்பட்டது போல 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு தரப்படுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் பொங்கல் மளிகை தொகுப்பில் இடம்பெறும் பொருட்களை கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் சில கூட்டுறவு சங்கங்களால் மசாலா பொருட்கள், எண்ணெய் வகைகள், மாவு வகைகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இவை கூட்டுறவு அங்காடிகளிலும் விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் ₹199, ₹499, ₹999 மதிப்புள்ள மளிகை தொகுப்புகள் விற்பனையாக உள்ளன. இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள மஞ்சள் தூள், மசாலா பொடி, மாவு பொருட்கள், எண்ணெய் வகைகள் போன்றவற்றை காஞ்சிபுரம், மதுரை, ஈரோடு, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், சேலம், திருவள்ளூர், கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் இருந்து வாங்க வேண்டும் என்று அங்காடிகளை நடத்தும் அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் உணவுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அமுதம் அங்காடிகளில் பொங்கல் மளிகை தொகுப்பை விற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டுறவு சங்கங்களிடமிருந்து இந்த மளிகை தொகுப்பை வாங்க அரசு உத்தரவிட்டால், தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு வாங்குவது தடுக்கப்படுவதுடன் கூட்டுறவு சங்கங்களுக்கு வருமானமும் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்குகிறீர்களா? தை மாதம் ரூ.2000 கிடைக்கும்!
மேலும் படிக்க - தமிழக அரசு வழங்கும் ரூ. 1000 பொங்கல் பரிசு தொகை! இவர்களுக்கு கிடைக்காது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ