வரும் 14-ஆம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் உதவி மையத்திற்கு சான்றிதழ்களுடன் வரலாம் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது!
பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் சமிர்பிக்கும் பணிகள் கடந்த ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு வர முடியாத மாணவர்கள் வரும் 14-ஆம் தேதிக்கு முன் எப்போது வேண்டுமானாலும் உதவி மையத்திற்கு வரலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக, கடந்த மே 3 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை ஆன்லைன் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த காலத்தில் 1,59,631 பேர் பெறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பித்த அனைவருக்கும் கடந்த ஜூன் 5-ஆம் நாள் ரேண்டம் எண் வழங்கப்பட்டன. இதனையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்காக தமிழகம் முழுவதும் 42 சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த வெள்ளி முதல் சான்றிதழ் சரிபாக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்காக குறிப்பிட்ட தேதியில் செல்ல முடியாதவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே சேவை மையத்தில் வரும் 14-ஆம் தேதிக்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வரலாம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.