முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்த புகாரின் பேரில் தேர்தல் கமிஷன் தேர்தலை நிறுத்தியது.
இப்போது மீண்டும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷ், போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன.இவர்களை தவிர டிடிவி தினகரன், ஜே.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் நடிகர் விஷாலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
பாஜக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட, கங்கை அமரன், உடல் நலமில்லாததால் தேர்தலில் போட்டியிட இயலவில்லை.
இந்நிலையில் பாஜக சார்பில் யார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
#Chennai: BJP announces Karu Nagarajan as candidate for upcoming by-polls in RK Nagar pic.twitter.com/g8JH4otohA
— ANI (@ANI) December 2, 2017
இவர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பித்த போது, கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். அதன் பின் 2016ம் ஆண்டு பிஜேபியில் இணைந்தவர். என்பது குறிபிடத்தக்கது.