மன்னிப்பு கோரிய ராணுவ அதிகாரி! முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம்!

தமிழ்நாடு அரசை மிரட்டும் விதமாக பேசிய முன்னாள் ராணுவ கர்னல் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2023, 07:58 AM IST
  • தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்த பாண்டியன்.
  • வெடிகுண்டு வைக்கத் தெரியும் என்று கூறி இருந்தார்.
  • தற்போது மன்னிப்பு கேட்டு உள்ளார்.
மன்னிப்பு கோரிய ராணுவ அதிகாரி! முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம்! title=

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் பா.ஜ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.,வை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் என்பவர், தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.  ராணுவத்தில் பணியாற்றிய தங்களை போன்றவர்களுக்கு வெடிகுண்டு வைக்கத் தெரியும். துப்பாக்கி சுடுவதிலும், சண்டை போடுவதிலும் நாங்கள் கெட்டிக்காரர்கள். இதை எல்லாம் செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு அவர் மிரட்டல் விடுத்து பேசினார்.

மேலும் படிக்க | 10ஆம் வகுப்பு மாணவர்களின் கவனித்திற்கு! இன்று முதல் ஹால் டிக்கெட்

army

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் பாண்டியன் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். 

மனுதாரர் சார்பில்,  இதுபோல மிரட்டல் விடுக்கும் விதமாக இனி பேச மாட்டேன் என்று மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி,  இனி இதுபோல பேச மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாண்டியன், இனி இதுபோல பேச மாட்டேன் எனறு நிபந்தனையற்ற மன்னிப்பு  கேட்டார்.  இதையடுத்து ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து திருவல்லிகேணி போலீசில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | திருச்செந்தூர் அருகே கடலில் விடப்பட்ட அரிய வகை ஆமை குஞ்சுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News