காவிரி விவகாரதில் புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி மறுப்பு: உச்சநீதிமன்றம்!

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 63 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழகம் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு. 

Last Updated : Nov 21, 2017, 01:07 PM IST
காவிரி விவகாரதில் புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி மறுப்பு: உச்சநீதிமன்றம்! title=

காவிரியில் இருந்து இந்த ஆண்டிற்கு 63 டிஎம்சி தண்ணீர் திறக்க கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இக்கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.  காவிரி விவகாரம் தொடர்பாக இதுபோன்ற புதிதாக தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெளிவாகக் கூறினார். 

காவிரி வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலிலனை   செய்ய இயலாது என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

 

Trending News