Chennai Metro முக்கிய செய்தி: இந்த நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2021, 01:06 PM IST
  • சென்னை மெட்ரோ ரயில்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் கட்டம் கட்டமாக இயங்கத் தொடங்கின.
  • தற்போது, சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.
  • ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்-மெட்ரோ ரயில் நிர்வாகம்.
Chennai Metro முக்கிய செய்தி: இந்த நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை  title=

சென்னை: சென்னை மக்களின் முக்கிய பொதுப் போக்குவரத்து சாதனங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது சென்னை மெட்ரோ ரயில். கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக இயக்கத்தில் இல்லாமல் இருந்த சென்னை மெட்ரோ ரயில்கள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் கட்டம் கட்டமாக இயங்கத் தொடங்கின.

இந்த நிலையில், சென்னையில் (Chennai) ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது, சென்னையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் (Metro Rail) இயக்கப்பட்டு வருகின்றது.  மெட்ரோ ரயில் சேவை நேரம் இப்போது 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது. 

ALSO READ: தமிழக அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி: வெளிவரவுள்ளது அரசின் புதிய அறிவிப்பு

மக்கள் வசதிக்காக கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு திங்கள் காலையுடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகள் கூடிய ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (Lockdown) ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அடுத்த கட்ட ஊரடங்கில்,  மாநிலங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை. திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மதுக்கூடங்கள், சமுதாய, அரசியல் கூட்டக்களுக்கு தடை தொடர்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், கவ்லி நிறுவனங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றை திறக்க தடை தொடர்கிறது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் நேற்று 2,312 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,31,118 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 144 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 46 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,652 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 29,230 ஆக உள்ளது.

ALSO READ: தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News