கடந்த 2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021 இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன.
இந்த சட்டத்திருத்தம் (Cinematograph act 2021) படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சினிமா (Tamil Cinema) துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யா, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இது குறித்த தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
ALSO READ | எங்களுக்கு மத்திய அரசுதான்; பெயரை மாற்றியதால் என்ன பயன்: அன்புமணி ராமதாஸ்
இதற்கிடையில் நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி, தயாரிப்பாளர்கள் ராஜசேகர், கற்பூர செந்தூர பாண்டியன் உள்ளிட்டவர்கள் நேற்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர். திரைத்துறையின் கருத்து சுதந்திரத்தை மட்டுமல்ல, அதை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க தமிழக அரசு இதில் தலையிட்டு ஆதரவளிக்க வேண்டும் என தங்கள் மனுவில் கோரியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும் என ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஒளிப்பதிவு திருத்த மசோதா கருத்து சுதத்தரத்தை பறிக்கும் வகையில் இருப்பதால், அதனை திரும்பப் பெற வேண்டும்.
மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் @mkstalin கடிதம். pic.twitter.com/IihYCBvtSx
— Ravikumar (@Ravikumarceg) July 6, 2021
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR