அதிமுகவுக்கு தாவிய 8 தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ-கள் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துவார்களா?

2011 ஆம் ஆண்டு தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 8 பேர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 28, 2023, 04:45 PM IST
  • தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு தாவல்
  • அந்த 8 முன்னாள் எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்துவார்களா?
  • விஜயகாந்தால் எம்எல்ஏ பதவியை பெற்றவர்கள்
அதிமுகவுக்கு தாவிய 8 தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ-கள் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்துவார்களா? title=

தேமுதிக நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு கண்ணீர் மல்க விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அவரால் எம்.எல்.ஏ பதவி பெற்று, அதிமுகவுக்கு தாவிய 8 பேர் கேப்டன் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

2011 ஆம் ஆண்டு விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, அப்போதைய அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. இக்கூட்டணி வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்தது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 எம்எல்ஏக்களை பெற்றது. அத்துடன் தமிழ்நாட்டின் எதிர்கட்சி என்ற அந்தஸ்தும் தேமுதிகவுக்கு கிடைத்தது. அக்கட்சியின் நிறுவன தலைவராக இருந்த விஜயகாந்த் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார். 

எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் அதிமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்ட ஆரம்பித்தார் விஜயகாந்த். இது அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியது. ஒருமுறை சட்டமன்றத்தில் நேருக்கு நேராக ஜெயலலிதாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் விஜயகாந்த். அப்போது முதல் தேமுதிக என்ற கட்சி கரைய ஆரம்பித்தது. ஆம், தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாஃபா பாண்டியராஜன், தமிழழகன், அருண் சுப்பிரமணியன், அருண் பாண்டியன், மைக்கல் ராயப்பன், சாந்தி, சுந்தரராஜன், சுரேஷ் ஆகியோர் அதிமுகவுக்கு தாவினார்கள். உடனடியாக அவர்கள் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சிறிதுகாலம் சட்டமன்றத்தில் தேமுதிகவின் அதிருப்தி எம்எல்ஏக்களாகவே செயல்பட்டனர்.

இந்த துரோகத்தை விஜயகாந்தால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவருடைய தயவினால் எம்எல்ஏ சீட் பெற்று வெற்றி பெற்றவர்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே தேமுதிவில் இருந்து அதிமுகவுக்கு மாறியது அவருக்கு மன சங்கடத்தையும் கசப்பையும் உருவாக்கியது. அதன்பிறகு அவருடைய உடல்நிலையும் மோசமாகி, இப்போது காலமாகியுள்ளார். இந்நிலையில், விஜயகாந்துக்கு துரோகம் செய்த அந்த 8 முன்னாள் எம்எல்ஏக்கள் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்து வருவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News