சென்னை :அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நடிகர் கமல் பொது நிகழ்ச்சிக்கு சென்றதால் தமிழக மருத்துவத்துறை நோட்டிஸ். தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. இது தற்போது தமிழில் 4 சீசன்களை கடந்து 5-வது சீஸனும் வெற்றிநடைபோட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியினை கமல்ஹாஸன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்று.
ALSO READ கோவிட் தொற்றிலிருந்து மீண்டபின் கமல்ஹாசன் நெகிழ்ச்சி ட்வீட்
திடீரென்று அமேரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதித்தது. அதனையடுத்து அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு பதிலாக ரம்யாகிரிஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் கமலுக்கு கொரோனா தொற்று குணமானதை தொடர்ந்து அவர் ஓய்வெடுக்காமல் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்தார், ஆனால் இவ்வாறு செய்வது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் செயல் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டிருந்தாலும், அதன் பின் 7 நாட்கள் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகர் கமல்ஹாசன், 7 நாட்கள் வீட்டு தனிமையில் இல்லாமல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். இவ்வாறு விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புக்கு சென்றது தொடர்பாக விளக்கம் அளிக்க கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டிஸ் அனுப்பும்" என்று கூறியுள்ளார்.
ALSO READ சாதி அவமதிப்பு செய்தார் விஜய் சேதுபதி: நடிகரை தாக்கிய மஹா காந்தி நீதிமன்றத்தில் வழக்கு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR