மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட வடதமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Last Updated : Jul 22, 2019, 07:33 AM IST
மேலடுக்கு சுழற்சி காரணமாக வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! title=

மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட வடதமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நகர் மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்து வந்த நிலையில், இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில், மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருவதால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரம் பொறுத்துவரையில் அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், வால்பாறை, சோலையாறில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், இன்றும், நாளையும், மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Trending News