காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்!
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இது குறித்து அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசின் அதிகாரிகளாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாநில நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. காவிரி ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் கர்நாடகா சார்பில் அதிகாரிகளின் பெயர்களை இதுவரை பரிந்துரை செய்யவில்லை.
மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக என அம்மாநில முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த உடனடியாக மேலாண்மை ஆணையத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.