காஞ்சி அம்மனுக்கு 5 கோடி மதிப்பில் தங்கக் கவசம்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.5.75 கோடி மதிப்பில் கீரீடம் முதல் பாதம் வரை முழுவதும் அணிவிக்கும் தங்கக் கவசத்தை கானிக்கையாக செலுத்தினார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 17, 2022, 11:14 AM IST
  • பக்தர் ஒருவர் ரூ.5.75 கோடி மதிப்பில் தங்கக் கவசம் கானிக்கை.
  • 12 கிலோவில் 1 கிரீடம், 4 தங்க கைகள், தங்க பாதங்கள் காணிக்கை.
  • காமாட்சி அம்மனுக்கு 64 விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
காஞ்சி அம்மனுக்கு 5 கோடி மதிப்பில் தங்கக் கவசம்!  title=

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தரான அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த கிரி, சுமார் 5 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் வைரங்கள், வைடூரியங்கள், நவரத்தினங்கள், பதித்த 12 கிலோ எடையுள்ள, 1 கிரீடம், 4 தங்கக் கைகள், தங்க பாதங்கள் உள்ளிட்டவைகளை செய்து காணிக்கையாக வழங்கி உள்ளார்.

அம்மனுக்கு அணிவிக்கும் முன்பாக, இந்தத் தங்க கவசம் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டு காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இருந்து நேற்று மாலை காமாட்சி அம்மன் கோயிலுக்கு மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 

மேலும் படிக்க | 3ஜி, 4ஜிக்கு டாடா, இந்தியா விரைவில் 6G அறிமுகம்

இந்த ஊர்வலத்துக்கு சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் சங்கர மடத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. 

இதை தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு 64 விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மனுக்கு தங்க கவசத்தை அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் செய்தார். 

இக்கவசம் அணிவிப்பதை ஒட்டி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி திங்கட்கிழமை நண்பகல் வரை, கும்பகோணம் தினகர சர்மா தலைமையில் ஹோமங்கள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளைக் காமாட்சி அம்மன் கோயில் பொருப்பாளர்கள் செய்தனர்.

இந்த ஊர்வலத்திலும், தங்க கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் ஐதராபாத்தைச் சேர்ந்த உபயதாரர், அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த கிரி உள்பட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த வாரம் முழுவதும் தங்க கவசம் பக்தர்கள் பார்வைக்காக அம்மனுக்கு சாத்தப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Amazon Fab Phones Fest: ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News