மதுரை: கொரோனாவை எதிர்த்து போராடும் கோயில் நகரம்

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சென்னையை பின்பற்றி ஊரடங்கை நீட்டிக்க மதுரையும் முடிவு செய்தது. தீவிர சோதனைகளும் ஸ்க்ரீனிங் பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2020, 10:35 AM IST
  • கோவிட்-19 நேர்மறை நோயாளிகளின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ள நிலையில், தற்போது கொரோனா குறித்த பதட்டம் இங்கு அதிகரித்து வருகிறது.
  • சென்னையை பின்பற்றி ஊரடங்கை நீட்டிக்க மதுரையும் முடிவு செய்தது.
  • மக்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்படுகிறார்கள்.
மதுரை: கொரோனாவை எதிர்த்து போராடும் கோயில் நகரம் title=

தமிழகத்தில் (Tamil Nadu) ஒவ்வொரு மாவட்டமாக தன் படியில் சிக்கவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா (Corona) தொற்று கோயில் நகரமான மதுரையையும் (Madurai) ஆக்கிரமித்து வருகிறது. கோவிட்-19 நேர்மறை நோயாளிகளின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ள நிலையில், தற்போது கொரோனா குறித்த பதட்டம் இங்கு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சென்னையை பின்பற்றி ஊரடங்கை நீட்டிக்க மதுரையும் முடிவு செய்தது. தீவிர சோதனைகளும் (Massive screening) ஸ்க்ரீனிங் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இதற்கிடையில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடு இருப்பதாகவும் தகவல் வந்தது. எனினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான சுவாசப் பிரச்னைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 59 வயது நபர் ஒருவர், பீதி அடைந்த நிலையில் வீடு திரும்பினார்.  மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், ஆறு படுக்கைகளுக்கு 30 நோயாளிகள் காத்துக்கொண்டிருப்பதாகவும் அவரது மகன் தெரிவித்தார்.

ஜூன் மாதன் துவக்கம் வரை, இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மதுரையை சேர்ந்தவர்கள் திரும்பி வர எல்லைகள் திறக்கப்பட்டு, பல்வேறு பகுதிகலிலிருந்து மக்கள் மதுரைக்கு திரும்பியவுடன், தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. நாளொன்றுக்கு 50 ஆக இருந்த சராசரி தொற்றின் அளவு 200-300 ஆக அதிகரித்தது.

எனினும், பரவை சந்தை பகுதியில் விரைவாகப் பரவிய தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதார அதிகாரிகளுக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்தது. மாவட்டத்திற்குள் இருந்த மக்கள் நடமாட்டமும், மாவட்டத்தின் வெளியிருந்து திரும்பி வந்த மக்களும், மருத்துவ வசதிகளுக்காக மதுரைக்கு வந்த நோயாளிகளும், தொற்று பரவ காரணமாக இருந்தார்கள் என மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் கூறினார்.

ALSO READ: தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா... மொத்த பாதிப்பு 1,11,151 ஆக உயர்வு..!

 ”மே, ஜூன் மாதங்களில், எல்லையில் கண்காணிப்பு சற்று மந்தமான நிலையில் இருந்தது. பிற மாநிலங்களிலுருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வந்த மக்களின் எண்ணிக்கை 10,000-க்கும் மேல் அதிகரித்ததால், தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்தது.” என ஒரு மாவட்ட நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

எனினும் தற்போது நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. மக்கள், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்படுகிறார்கள், பஞ்சாயத்துகளில் காய்ச்சலுக்கான சோதனைகள் நடக்கின்றன. வீடு வீடாகச் சென்றும் சோதனைகள் (Testing) நடத்தபடுகின்றன. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றினால் அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

Trending News