வைகோ மகனுக்கு பதவி எதிரொலி : முக்கிய நிர்வாகி விலகல்

நேற்று நடந்த ம.தி.மு.க கூட்டத்தில் கட்சியின் மாநில தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாநில இளைஞரணித் தலைவர் கோவை ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 21, 2021, 12:05 PM IST
வைகோ மகனுக்கு பதவி எதிரொலி : முக்கிய நிர்வாகி விலகல் title=

நேற்று காலை சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க கட்சி அலுவலகத்தில மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வைகோவின் மகனான துரை வையாபுரிக்கு கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உட்பட மாவட்டச் செயலாளர்களும் ம.தி.மு.க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பல முக்கிய பல முடிவுகள் எடுக்கப்பட்டன. கட்சியின் வளர்ச்சி குறித்தும், அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது. ம.தி.மு.க (MDMK) தலைமை கழக செயலாளர் பொறுப்புக்கு துரை வைகோ தேர்வு செய்யப்பட்டது கூட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கிய ஒரு முடிவாகும்.

எனினும், இந்த முடிவு பல மூத்த தலைவர்களுக்கு இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ம.தி.மு.க மாநில இளைஞரணித் தலைவர் கோவை ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். 

கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக இருந்தால் தன்னால் தான் நினைக்கும் செயல்களை செய்ய முடியாது என தோன்றியதால், தான் கட்சியிலிருந்து விலகுவதகாவும், தனக்கு சரி என்று படுவதை செய்ய தனியாக மற்றொரு இயக்கத்தை தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ALSO READ: மதிமுக கட்சியிலும் வாரிசு அரசியல்! வைகோ மகனுக்கு முக்கிய பொறுப்பு

நேற்று நடந்த ம.தி.மு.க கூட்டத்தில் கட்சியின் மாநில தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 

தான் கட்சியிலிருந்து விலகியது தொடர்பாக ஈஸ்வரன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கடந்த 28 ஆண்டுகளாக தன் வாழ்க்கையை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்காக அர்ப்பணித்து பணியாற்றி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளதாகவும் மக்களின் பிரச்னைகளை தீர்க்க அறப்போராட்டத்தின் வாயிலாகவும் சட்டப்போராட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து போராடிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கட்சியில் பொறியாளர் அணி அமைப்பாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், இளைஞர் அணி செயலாளர் என்று பல முக்கிய பொறுப்புகளில் தான் சிறந்த முறையில் தன் பணிஅயை செய்ததாகவும் அவர் மேற்கோல் இட்டு காட்டியுள்ளார். இவை அனைத்திலும் தனக்கு ஒத்துழைப்பை அளித்த இயக்க தோழர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். 

“கட்சியில் பலருக்கு திறமை உள்ளது. கட்சியில் பலருக்கு திறமை உள்ளது. வைகோவின் மகனால் தான் கட்சியை நடத்த முடியும் என்பதில்லை. வைகோ யாரையும் கை காட்ட தேவையில்லை.” என்று ஈஸ்வரன் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈஸ்வரன் கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து கட்சியின் இன்னும் சில உறுப்பினர்களும் விலக்கக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்ன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி விற்பனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News