அரசியல் என்பது சினிமா இல்லை; 1 வாரம் வந்து போவதற்கு! மீண்டும் விஜய்யை தாக்கிய திமுக அமைச்சர்!

அரசியல் என்பது சினிமா படமல்ல, ஒரு வாரம் ஓடி விட்டு போவதற்கு, திமுக என்பது எக்கு கோட்டை. திமுகவிற்கு என பெரும் யுத்த வரலாறு உள்ளது. பொதுக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேச்சு.

Written by - RK Spark | Last Updated : Dec 17, 2024, 02:28 PM IST
  • பேசி பேசி வளர்ந்த கட்சி திமுக.
  • அதனை வீழ்த்த வேறு கட்சி கிடையாது.
  • திமுகவிற்கு என பெரும் யுத்த வரலாறு உள்ளது.
அரசியல் என்பது சினிமா இல்லை; 1 வாரம் வந்து போவதற்கு! மீண்டும் விஜய்யை தாக்கிய திமுக அமைச்சர்! title=

நெல்லை மத்திய மாவட்டதிமுக சார்பில் திமுகவின் பவளவிழா, திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மாமன்ற உறுப்பினரும், பகுதி கழக துணை செயலாளருமான ஆமீனாசாதிக் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சரும் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றினார்.

மேலும் படிக்க | ஆண்டாள் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்கப்படாதது ஏன்? வெளியான அறிக்கை!

அப்போது பேசிய அவர் சமூக நீதி கண்ட தலைவர் கலைஞர் வழி வந்தவர் ஸ்டாலின். அவர் முதல்வராக வரமுடியாது கட்டம் சரியில்லை ராசி சரியில்லை என புறம்பேசிய தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்பின்பு நடந்து முடிந்த அனைத்து தேர்தலிலும் வெற்றியை பெற்று இந்தியாவிற்கு அரசியல் கற்றுகொடுத்த தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார். சிறுபான்மை மக்களுக்கு இஸ்லாமிய மக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் மு.க ஸ்டாலினும், திமுகவும் அரணாக இருக்கும். மோடி வித்தை தமிழகத்தில் எடுபடாது. அண்ணா, பெரியார் ,கலைஞர், பேராசிரியர் என அனைத்து தலைவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடிய இயக்கமாக திமுக உள்ளது. நூற்றாண்டு எனும் சொல்லை பயன்படுத்தும் தகுதி திமுகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் கிடையாது.

திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்கமுடியாது. அரசியல் என்பது சினமா படமல்ல ஒரு வாரம் ஓடி விட்டு போவதற்கு. திமுக என்பது எக்கு கோட்டை. இது பெரியார் பூமி மதசார்பற்ற பூமி என்பதை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் காட்டியது. மோடியை எதிர்க்கும் வல்லமை தென்னகத்தின் ஒரே தலைவரான மக்கள் தலைவர் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது, வேறு எந்த தலைவருக்கும் இல்லை. பேசி பேசி வளர்ந்த கட்சி திமுக. அதனை வீழ்த்த வேறு கட்சி கிடையாது. திமுகவிற்கு என பெரும் யுத்த வரலாறு உள்ளது. அது நேற்று பெய்த மழையில் முழைத்த காளான்கள் சினிமா நடிகர்களுக்கு ஜாதிய கட்சி தலைவர்களுக்கும் அந்த வரலாறு தெரியாது. கலைஞரின் பேரன் உதயநிதி ஆரியத்தின் மீது சம்மட்டி அடிக்க புறப்பட்டுள்ளார். அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் காரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மாறுதலாக ஏறி செல்ல முயன்றார்.அதனை சட்டமன்றத்தில் கலைஞரின் பேரனாக நக்கல் நயாண்டியுடன் பேசியபோது எடப்பாடி அவர்களே தாராளமாக எனது காரில் ஏறி செல்லுங்கள் கமலாலயம் மட்டும் சென்றுவிடாதீர்கள் என்றார்.

ஏன் என்றால் அதிமுக எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும் திராவிட வழியில் செல்லவேண்டும் என்ற அர்த்தத்திலேயே உதயநிதி ஸ்டாலின் சொன்னார். திமுக கூட்டணி 40க்கு 40 என தமிழகத்தில் 100 க்கு 100 வெற்றியை பெற்றது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வரலாறை படைத்தது தமிழகத்தில் தான் என்பதை முதல்வர் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் உரக்க சொன்னார். வரும் தேர்தலில் 200 பிளஸ் என முதல்வர் சொல்லியுள்ளார். ஆனால் சிறுபான்மை மக்கள் பொதுமக்கள் ஆதரவுடன் 234 க்கு 234 தொகுதிகளையும் வெற்றி பெறுவோம் தமிழகத்தில் எதிர்கட்சியே இல்லாத நிலையை உருவாக்குவோம். பிற்படுத்தபட்ட, சிறுபான்மையின தாழ்த்தபட்ட மக்களுக்கான பாதுகாவலராக முதலவர் ஸ்டாலின் இருந்து வருகிறார். திமுகவின் சொற்பொழிவாளராக இருந்த என்னை 3 முறை  திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற செய்து அமைசாராக்கி முதல்வர் ஸ்டாலின் அழகுபார்த்தவர்.

தொட்டால் தீட்டு என்று சொல்பவர்களே அம்பேத்கர் உருவம் பொறித்த  நாணயத்தை உண்டியலில் இருந்து கையால் எடுக்கும் நிலையை உருவாக்கிய புரட்சியாளர் கலைஞர். நம் நாட்டின் பண்பாடு திராவிடத்தை கட்டி காக்க தற்போது ஸ்டாலினும் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில்  சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மாநில வர்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, துணை மேயர் ராஜூ, கிறிஸ்தவ தேவாலய உபதேசியார்கள் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலாசத்தியானந்த் தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், பகுதி கழக செயலாளர் துபாய் சாகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் அதிகமா? தமிழ்நாடு அரசு விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News