இந்த காரணத்திற்காக தான் பொங்கல் பரிசில் ரூ. 1000 இல்லை! அமைச்சர் கொடுத்த விளக்கம்!

பொங்கல் பரிசுக்காக 280 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பே மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

Written by - RK Spark | Last Updated : Dec 30, 2024, 06:58 AM IST
  • பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1000 ஏன் இல்லை?
  • அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.
  • மகளிர் உரிமை தொகை சீக்கிரம் கிடைக்க ஏற்பாடு.
இந்த காரணத்திற்காக தான் பொங்கல் பரிசில் ரூ. 1000 இல்லை! அமைச்சர் கொடுத்த விளக்கம்! title=

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் வெளிப்பாடாக கொண்டாடப்படும் இந்த விழா மிகவும் மரியாதையுடன் கொண்டாடப்பட்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தீபாவளியை காட்டிலும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால், இந்த விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2009 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கார்டு இல்லாதவர்களும் பெற முடியும் - எப்படி?

அவ்வப்போது இதில் சில பொருட்கள் சேர்த்து வழங்கப்படும். அதை தொடர்ந்து சமீபத்தில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணமும் நேரடியாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2025ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் புனர்வாழ்வு முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய இலவச வேட்டி சேலைகளை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்த, பொங்கல் 2025 பரிசு தொகுப்பில் ரூ. 1,000 ரொக்கம் சேர்க்கப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 வழங்கப்பட்டதால் இந்த முறை அந்த அறிவிப்பு இல்லாத நிலையில் மக்கள் ஏமாற்றமடைந்தனர். பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்கம் ஏன் இல்லை என்று நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு மாநில பேரிடர் நிதியில் இருந்து, சூறாவளி மற்றும் மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு, 2,028 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும், மத்திய அரசிடம் 2,76,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதி கேட்டதற்கு, 37 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியதாகவும், இதனால் தமிழக அரசு தனது சொந்தப் பணத்தை அதிகம் செலவிட வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார். எனவே நிதிச்சுமை காரணமாக ரூ. 1000 வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் மீண்டும் பொங்கல் பரிசில் ரூ. 1000 வழங்கும் சூழல் வரும் என்றும் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையை விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | பதவியை ராஜினாமா செய்யும் அன்புமணி? தைலாபுர தோட்டத்தில் பேச்சுவார்த்தை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News