மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 11-ம் தேதி (இன்று) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 11, 2021, 07:16 AM IST
மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை! title=

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முதல் வழிபாட்டு தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன.

ரமலான் நோன்பு (Ramzan) முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதில், இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தி இரவு 10 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில் கொரோனா தொற்றை (Coronavirus) கட்டுப்படுத்த தற்போது புதிய கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. அதில்., 

ALSO READ | மக்கள் கவனத்திற்கு! Night Curfew பிறப்பிக்க நேரிடலாம்: எச்சரிக்கும் தமிழக அரசு

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா (Marina Beach) உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும்  அனைத்து வழிபாட்டு தலங்கள் அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி இரவு 10 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்க அனுமதிக்கப்படுகிறது.

புதிய திரைப்படங்கள் முதல் 7 நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதிக்கப்படுகிறது. அனைத்துக் காட்சிகளின் போதும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News