சிகாகோ நகரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 'இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்' என்ற விருதினை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றார்!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு 'இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வழங்கியுள்ளார். இந்த நிகழ்வின் புகைப்படங்களை தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளார்.
சிகாகோ நகரில் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் அமெரிக்க முதல் தமிழ்செனட்டர் உயர்திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்“இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்” என்ற விருதை வழங்கினார்.இவ்விருதை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் அர்பணிக்கிறேன் @BJP4India pic.twitter.com/w8Bywxfkd7
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) October 29, 2018
அரசியல், மருத்துவம், சமூக சேவைகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கிய பெண் தலைவர் என்ற பிரிவில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த விருதை பெறுவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுடெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பிறகு, சிகாகோ, வாஷிங்டன் ஆகிய இடங்களில் தமிழ் சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பின்னர் வரும் நவம்பர் 3-ஆம் நாள் அவர் சென்னை திரும்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.