நடப்பாண்டில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் நகராட்சி உட்பட்ட பல்வேறு இடங்களில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது ஓரிரு மாதங்களில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் இன்று மின்வெட்டு இல்லாத நிலைமை உருவாகியுள்ளது, தமிழகத்தில் தான் விலையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து பேசிய அவர்., மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களை ஒரு இம்மி அளவு கூட குறையாமல் எடப்பாடி அரசு தற்போது நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.