சென்னை விமான நிலைய அறிவிப்புகளிலிருந்து தமிழ் நீக்கம்? அதிகாரி விளக்கம்

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விமான நிலைய இயக்குனர் சந்திர மௌலி மறுத்துள்ளார்.

Last Updated : Feb 9, 2018, 11:11 AM IST
சென்னை விமான நிலைய அறிவிப்புகளிலிருந்து தமிழ் நீக்கம்? அதிகாரி விளக்கம் title=

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விமான நிலைய இயக்குனர் சந்திர மௌலி மறுத்துள்ளார்.

விமானங்களின் வருகை, புறப்பாடுகுறிதந்து சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் அறிவிப்பு வெளியாகும். 

இந்நிலையில் நேற்று காலை சென்னை விமான நிலையத்தின் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுவதால், மூன்று மொழிகளில் அறிவிப்பு வெளியாவதால் தாமதம் ஏற்படுவதாகக் கூறி தமிழ், ஹிந்தி மொழி அறிவிப்புகள் நீக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இதற்கு, மக்கள் மத்தியில் பெரும்  எதிர்ப்பு கிளப்பியது. 

இதனைத் தொடா்ந்து விமான நிலைய இயக்குனர் சந்திரமெளலி விளக்கம் அளித்துள்ளார். இன்று காலையில் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டதால், ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு வெளியானது. மேலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் இந்த பிரச்னை ஏற்பட்டது. தற்போது, அது சரிசெய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

Trending News