பாலை மீண்டும் பாட்டிலில் அடைத்து விற்கலாமே!...சென்னை உயர்நீதிமன்றம் யோசனை

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

Written by - Chithira Rekha | Last Updated : Apr 21, 2022, 07:16 PM IST
  • பால் பாக்கெட்டினால் அதிகரிக்கும் பிளாஸ்டிக்
  • ஏன் பாலை பாட்டிலில் விற்கக் கூடாது?
  • சென்னை உயர்நீதிமன்றம் யோசனை
பாலை மீண்டும் பாட்டிலில் அடைத்து விற்கலாமே!...சென்னை உயர்நீதிமன்றம் யோசனை title=

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக கடைகள் சீல் வைக்கப்பட்டது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உணவு பொருட்கள், விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள் பிளாஸ்டிக் பைகளில் புகுத்தி விற்கப்படுவதாக கூறி நீதிபதிகளிடம் காண்பித்தார். மஞ்சப்பை திட்டம் கொண்டு வந்தாலும் 15 ரேஷன் பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைத்தே விற்கப்படுகிறது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | குப்பையைக் காணவா நுழைவுக் கட்டணம்? மாமல்லபுரம் குறித்து நீதிமன்றம் கண்டனம்

பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடுத்து வருவதை தடுக்காத வரையில், அவற்றைப் பறிமுதல் செய்வதால் பெரிய அளவில் பலன் இல்லை என  நீதிபதிகள் தெரிவித்தனர். ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து மஞ்சள் பையில் வழங்குவதால் எந்த பயனும் இல்லை என விமர்சித்த நீதிபதிகள், அரசே பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் எப்படி தடையை அமல்படுத்த முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். 

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி சில்லரை வியாபார கடைகளை மூடும் நிலையில் அரசே பிளாஸ்டிக்கில் பொருட்களை விற்பனை செய்யலாமா எனவும் நீதிபகள் கேள்வி எழுப்பினர். பால் பொருட்களுக்குத் தான் பெருமளவிற்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கள் பயன்படுத்தப்படுகிறது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பாலை ஏன் முன்பு போல பாட்டிலில் விற்கக்கூடாது எனக் கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை வரும் ஜூன்13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க | பகீர் தகவல்! உலகில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு Coca-Cola & PepsiCo முக்கிய காரணம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News