EPS மீதான டெண்டர் முறைகேடு புகாரை CBI விசாரிக்க இடைக்கால தடை: SC

முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2018, 12:19 PM IST
EPS மீதான டெண்டர் முறைகேடு புகாரை CBI விசாரிக்க இடைக்கால தடை: SC title=

முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை....

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது DMK அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையடுத்து, DMK தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், CBI விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து CBI விசாரிப்பதற்கான அவசியம் இல்லை எனக்கூறி தமிழக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என கோரி DMK தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகாரை CBI விசாரிக்க இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

Trending News