நாளை தேர்தல் திருநாள். வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை மற்றும் உரிமை. உங்கள் பகுதிக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்க நீங்கள் தவறாமல் வக்களிக்க வேண்டும்.
இந்நிலையில், சிலருக்கு வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போயிருக்கலாம். அல்லது தவறுதலாக எங்கேயாவது வைத்திருக்கலாம். ஆனால், வாக்காளர் அடையாள அட்டை இல்லையே என கவலைப்படாதீர்கள். உங்கள் அடையாளத்தை நிரூபிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால், கீழ்கண்ட ஆவணங்களை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரித்துள்ளது.
அதன் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1. ஆதார் அட்டை (Aadhaar Card)
2. பாஸ்போர்ட் (Passport)
3.ஓட்டுநர் உரிமம்
4. பான் கார்டு (PAN Card)
5. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
6. வங்கி கணக்கு புத்தகம்
7.மருத்துவ காப்பீட்டிற்கான ஸ்மார்ட் கார்டு
8. தலைமை பதிவாளர் வழங்கிய ஸ்மார்ட் கார்டு
9 பொதுத்துறை நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட பணி அடையாள அட்டை
10. நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற ஊழியர்களுக்கான அடையாள அட்டை
11. 100 நாள் வேலைக்கான அட்டை
மேலே கொடுக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து சென்று, உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம். எனினும் வாக்குச்சாவடியில் உள்ள, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெளிவு படுத்தியுள்ளது. பட்டியலில் உங்கள் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம்.
வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமையாகும். எனினும், இம்முறை நாம் தொற்றுக்கு மத்தியில் இந்த கடமையை ஆற்றவுள்ளோம் என்பதை நாம் கண்டிப்பாக மனதில் கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது என அனைத்தையும் நாம் பின்பற்றி நமது வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ல வேண்டும்.
ALSO READ | ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR