முழு ஊரடங்கில் வீடு தேடி காய்கறி, பழங்கள் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளை (மே 24ம் தேதி) முதல் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளும் இன்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 23, 2021, 06:41 PM IST
முழு ஊரடங்கில் வீடு தேடி காய்கறி, பழங்கள் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு title=

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளை (மே 24ம் தேதி) முதல் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளும் இன்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதற்காக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள ஏதுவாக, நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்கள் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியது. 

அதை அடுத்து, எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காய்கறிகளின் விலையும் விண்ணை தொட்டுள்ளன. காய்கறிகளின் விலை, கிலோவுக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என்ற அளவிற்கு அதிகரித்தது.

இதனை அடுத்து, முழு ஊரடங்கு நாட்களில் தமிழகம் முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வீடு தேடி காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள மக்கள் 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகத்தை மேலும் விரிவுபடுத்திட தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது தவிர விநியோகத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல்  செய்யப்படும்.

ALSO READ: தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு: கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்

நேற்று கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 448 பேர் தமிழகத்தில் இறந்தனர். இதனுடன் தொற்று பாதிப்பால் தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,046 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 2,84,278 ஆக உள்ளது.

சென்னையில் (Chennai) மட்டும் நேற்று ஒரே நாளில் 5,559 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இன்று சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 86 பேர் உயிர் இழந்தனர். 

ALSO READ: கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News