எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏழாம் கட்டமாக 17 ஆயுள் தண்டனை கைதிகள் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளில் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வது வழக்கம். இது குறித்து செய்திக்குறிப்புகளை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 1,700-க்கும் மேற்பட்ட கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் ஆறு கட்டங்களாக சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து 12 பெண்கள் உட்பட 193 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஐந்தாம் கட்டமாக புழல் மத்திய சிறையில் இருந்து அதிகாலையில் 17 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். புழல் மத்திய சிறையில் இருந்து இதுவரையில் மொத்தம் 210 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!