ஹோட்டல் மேலாளரை கொடூரமாக தாக்கும் ரவுடிகள் - பதறவைக்கும் வீடியோ

ஹோட்டல் மேலாளரை ரவுடிகள் கொடூரமாக தாக்கும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 14, 2022, 04:46 PM IST
  • சென்னை அருகே பயங்கரம் - மேலாளர் மீது தாக்குதல்
  • கல்லைக் கொண்டு தாக்கும் இரண்டு நபர்கள்
  • பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது
ஹோட்டல் மேலாளரை கொடூரமாக தாக்கும் ரவுடிகள் - பதறவைக்கும் வீடியோ  title=

அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த மகேஷ் கண்ணன்,  அங்குள்ள ஒரு ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு ஹோட்டலில் பணிபுரிந்து விட்டு இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற  நபர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து இருக்கிறார். இதனைப் பார்த்த மகேஷ் கண்ணன் விழுந்த நபரை தூக்கி விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அப்போது, அங்கிருந்த இரண்டு நபர்கள், மேலாளர் மகேஷ் கண்ணனை கீழே தள்ளி கல்லை அவரது முகத்தில் சரமாரியாக தாக்கினர். 

மேலும் படிக்க | மனைவியை அனுப்ப மறுத்த மாமனார்; வீட்டை எரித்த மருமகன்

தொடர்ந்து தாக்கிய அந்த நபர்களிடம் மகேஷ் கண்ணன் கெஞ்சிக் கேட்டும் விடாமல் அடிக்கின்றனர். கைக்கூப்பி தன்னைவிட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தாக்குவதால் மகேஷ் கண்ணன் தப்பி ஓட முயற்சிக்கிறார். பதபதைக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் மகேஷ் கண்ணன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் மல்லிகா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  மகேஷ் கண்ணனை தாக்கிய இரண்டு நபர்களை தேடி வந்தனர். 

காவல்துறை தேடுவதை அறிந்த அந்த நபர்கள் திடீரென தலைமறைவானார்கள். தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து மேலாளர் மகேஷ் கண்ணனை தாக்கிய மண்ணூர்பேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ், மணிகண்டன் ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில், மகேஷ் கண்ணன் பணிபுரியும் ஹோட்டலுக்கு அவர்கள் ஏற்கனவே உணவு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது பணம் கொடுக்கல் வழங்கல் பிரச்சனை ஏற்பட்டு, மகேஷ் கண்ணன் மீது அவர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்காக அவர் வரும் வழியில் காத்திருந்து தாக்கியுள்ளனர். குற்றத்தை ஒப்புக் கொண்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடிகள் தாக்கியதில் படுகாயமடைந்த உணவக மேலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

மேலும் படிக்க | மீண்டும் தீ பிடித்த இ-பைக்: பேட்டரி வெடித்ததால் ஷோரூமில் தீ விபத்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News