இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார். இதனையடுத்து அதிமுக அம்மா பேரவை சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் ஆலோசனை செய்யப்பட்டது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், "விஜய்யின் மாநாடு சிறந்த துவக்கமாக கிராண்ட் ஒப்பனாக அமைந்துள்ளது, இளைஞர் சமுதாயம் திமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை என விஜய்யின் மாநாட்டு வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது. விஜய்யின் மாநாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பங்கேற்றுள்ளனர்.
வாரிசு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, தவெக மாநாட்டில் எம்.ஜி.ஆரை சுட்டிக் காட்டி பேசியதை அதிமுக வரவேற்கிறது. திமுகவை தமிழ்நாட்டு மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்கு தவெக மாநாடு எடுத்துக்காட்டாக உள்ளது. சபரீசனை பார்க்காமல் தமிழகத்தில் யாரும் தொழில் தொடங்க முடியாத சூழல் உள்ளது, தவெகவால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை. ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும், தவெக கொள்கைகள் வரவேற்கதக்கது. அதிமுகவின் 52 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அதிமுக மக்களின் நிரந்தர வாக்கு வங்கியை கொண்டுள்ளது, உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டியதை தமிழ்நாட்டு மக்கள், இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இளைஞர் சமுதாயம் கொதித்து போயி விஜய் மாநாட்டுக்கு சென்றுள்ளனர்" என கூறினார்.
விஜய் பாஜக C டீம் தான் - அமைச்சர் ரகுபதி
விஜய்யின் பேச்சு குறித்து பேசிய திமுக அமைச்சர் ரகுபதி, "தனது கட்சியை A டீம் B டீம் என சொல்வார்கள் என நடிகர் விஜய் கூறினாலும் அவர் பாஜகவில் C டீம் தான். திராவிடம் மாடலின் ஆட்சியை மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது என்பதை நேற்று நடிகர் விஜய் வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். எங்களது கொள்கைகளுக்கு அவர்கள் விளக்கம் மட்டுமே மாநாட்டில் கொடுத்துள்ளனர். மு.க .முதல்வர் முன்னெடுத்து செல்லும் கொள்கைகளை தமிழக மக்கள் மத்தியில் இருந்து யாரும் பிரித்து விட முடியாது. நேற்று நடைபெற்றது மாநாடு என்பதைவிட பிரமாண்டமான சினிமா சூட்டிங் என்றே சொல்லலாம். தேர்தலில் வெற்றி பெற்று அவர்கள் ஆட்சிக்கு வரட்டும் அதன் பின்பு கூட்டணியில் பங்கு கொடுப்பது பற்றி பார்க்கலாம். அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தெரிந்து தான் அவர்களைப் பற்றி பேசவில்லை அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இருப்பதற்காகத்தான் விஜய் அவர்கள் குறித்து எதுவும் பேசவில்லை.
ஊழலைப் பற்றி பேச வேண்டுமெனில் 2011-21 வரையிலான ஆட்சியில் நடந்த ஊழலை பற்றி தான் பேச வேண்டும் 2021 26 இல் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை யாராலும் பேச முடியாது நாங்கள் எந்த ஒரு ஊழலிலும் ஈடுபடவில்லை. திமுகவை தாக்கி பேசினால் தான் மக்கள் மத்தியில் ஏதாவது சென்று பேச முடியும் அதனால் பேசுகின்றனர். திமுக இளைஞரணி மாநாட்டுக்கு வந்தவர்கள் முழுக்க முழுக்க இளைஞர்கள் தான். 1500 மீட்டர் 1000 அடி நீளம் என்ற அளவில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு பந்தல் அமைத்திருந்தோம் விஜயின் மாநாட்டு கூட்டத்தை விட மூன்று மடங்கு கூட்டத்தை நாங்கள் கூட்டி இருந்தோம். இளைஞர்கள் நம்பி வரும் இயக்கமாக திமுக தான் உள்ளது. தியேட்டரில் முதல் ஷோ ஓட்டுவது போல் கூட்டத்தை காட்டுவதற்காக இந்த மாநாட்டு சோவை நடத்தியுள்ளனர்.
திராவிடம் என்பது தமிழ் மண்ணில் இருந்து அகற்ற முடியாத ஒரு சொல் அந்த சொல் முதலில் வரும் போது அதன் பின்பு எந்த சொல் வந்தாலும் பிரச்சனை இல்லை நாங்களும் தமிழ்நாடு தான் சொல்கிறோம் திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. சிறுபான்மையின் நலனுக்கு இந்தியாவிலேயே பல்வேறு வகையில் அதிகமாக பாடுபட்ட பாதுகாக்கும் இயக்கம் திமுக தான். அதனால் என்னென்ன பாதிப்புகளை சந்தித்துள்ளோம் என்பது நாடறியும் ஒரு முறைக்கு இருமுறை கொள்கைக்காக ஆட்சி இழந்த கட்சி திமுக" என்று பேசியுள்ளார்.
மேலும் படிக்க | தமிழகத்தை கொள்ளையடிக்கும் திராவிட மாடல் ஆட்சி-விஜய் அட்டாக்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ