வேலூர் வந்தடைந்த உலகின் மிக உயரமான பஞ்சலோக நடராஜர் சிலை; பக்தர்கள் ஆரவாரம்!

உலகிலேயே மிகவும் உயரமான பஞ்சலோக நடராஜர் சிலைக்கு பக்தர்கள் வழிநெடுங்கிலும் மலர் தூவி மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பளித்தனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 8, 2022, 12:01 PM IST
  • தமிழ்நாட்டில் தங்ககோவிலில் தான் உலகில் மிகவும் உயரமான நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
  • சிலையானது மிகப்பெரிய லாரி மூலம் கும்பகோணத்திலிருந்து வேலூர் அரியூர் தங்ககோவிலுக்கு வந்தது.
  • வழிநெடுங்கிலும் காண காத்திருந்த பக்தர்கள் சிலை மீது மலர்களை தூவி ஸ்ரீநடராஜருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
வேலூர் வந்தடைந்த உலகின் மிக உயரமான பஞ்சலோக நடராஜர் சிலை; பக்தர்கள் ஆரவாரம்! title=

உலகிலேயே மிகவும் உயரமான, 23 அடி உயரம் மற்றும் 17 அடி அகலமும் கொண்ட, 15 ஆயிரம் கிலோ எடை கொண்ட ரூ.4 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை அரியூர் தங்ககோவில் வளாகத்தை வந்தடைந்தது. உயரமான பஞ்சலோக நடராஜர் சிலைக்கு பக்தர்கள் வழிநெடுங்கிலும் மலர் தூவி மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பளித்தனர். வேலூர் மாவட்டம் அரியூர் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலையில் பஞ்சலோகத்தால் 23 அடி உயரம் 17 அடி அகலம் 15 ஆயிரம் கிலோ எடையுடன் ஸ்ரீ நடராஜர் சிலை ஆனாது உருவாக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4 கோடியாகும். மேலும் இந்த அளவு உயரமான நடராஜர் சிலை உலகில் வேறு எங்கும் கிடையாது.

தமிழ்நாட்டில் அதுவும் தங்ககோவிலில் தான் உலகில் மிகவும் உயரமான நடராஜர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த சிலையானது மிகப்பெரிய லாரி மூலம் கும்பகோணத்திலிருந்து வேலூர் அரியூர் தங்ககோவிலுக்கு வந்தது. இதனை வழிநெடுங்கிலும் காண காத்திருந்த பக்தர்கள் சிலை மீது மலர்களை தூவி சிவவாத்தியங்களான திருவூடல் வாத்தியங்களை இசைத்து உலகில் மிகப்பெரிய ஸ்ரீ நடராஜருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும் படிக்க | இராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட கொலு... 1000த்துக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள்!

 இந்த சிலையில் சிறப்பு அம்சமாக 51 அக்னி ஜுவாலைகளும்,51 சிவ அக்ஷரங்களும், 52 சிம்மங்கள், 50 பூதகனங்கள், 102 தாமரை மலர்களும் சிற்ப வேலைபாடுகளும் இந்த சிலையினுள் அடங்கும். உலகில் வேறு எங்கும் இல்லாத இந்த சிலையானது தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சிலை அரியூர் மலைகோடி விருந்தினர் தங்கும் மாளிகை அருகில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | குருவின் வக்ர கதி: பண வரவால் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடப் போகும் ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News