ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல்லுக்கும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்சியடைந்துள்ளனர்.
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஏர்செல் நிறுவனம் இன்றுடன் முழுவதுமாக தனது சேவையை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்து உள்ளது. வாடிக்கையாளர்கள் அதற்குள் தங்களுக்கு விரும்பிய சேவையை தேர்வு செய்துகொள்ளும்படியும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்றுடன் ஏர்செல் நிறுவனம் முடங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்ற பல்வேறு இடத்திற்கும் அலைந்து வருகின்றனர்.
போர்ட் வசதி மாற்றம் கோரி ஒரேநேரத்தில் மக்கள் நிறுவனங்களுக்கு படையெடுப்பதால் அவர்களை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்நிறுவனம் கூறுகையில்:- தொழில் நுட்ப கோளாறு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை இருந்தால் செல்போனை ரீஸ்டார்ட் செய்யலாம் எனவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் சிரமமடைந்ததற்கு வருந்துகிறோம் என்றும் ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு தெரிவித்துள்ளது. என்ற தகவல் வெளியாகியுள்ளது.