Big News: 5G சேவையின் ரோட்மேப்பை தயார் செய்தது Airtel, இந்த நகரங்களில் முதலில் கிடைக்கும்

Airtel ஏற்கனவே நாட்டில் முதல் 5G சேவை சோதனையை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைபடத்தையும் தயார் செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2021, 08:17 PM IST
  • Airtel 5G சேவையில் 3Gbps வரை பதிவிறக்கும் வேகம் கிடைக்கக்கூடும்.
  • Airtel 5G சேவை முதலில் முக்கிய நகரங்களிலிருந்து தொடங்கப்படும்.
  • Airtel 5G ஹைதராபாதில் வணிக ரீதியாக துவக்கப்பட்டுள்ளது.
Big News: 5G சேவையின் ரோட்மேப்பை தயார் செய்தது Airtel, இந்த நகரங்களில் முதலில் கிடைக்கும் title=

புதுடெல்லி: நாட்டில் 5 ஜி சேவையை விரைவாக கொண்டு வர அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் முயற்சி எடுத்து வருகின்றன. இவற்றில் Airtel தனது போட்டியாளர்களை விட பலமடங்கு முன்னேறி விட்டது.

Airtel ஏற்கனவே நாட்டில் முதல் 5G சேவை சோதனையை செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இப்போது நிறுவனம் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைபடத்தையும் தயார் செய்துள்ளது.

பெரிய நகரங்களில் இது முதலில் தொடங்கும்

ஏர்டெல்லின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல், 5G சேவை முதலில் முக்கிய நகரங்களிலிருந்து தொடங்கப்படும் என்று கூறியுள்ளார் என தொழில்நுட்ப வலைத்தளமான telecomtalk கூறியுள்ளது. 5G சேவை ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் தொடங்கப்படாது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற உடனேயே இந்த சேவை தொடங்கப்படலாம்.

இந்த நெட்வொர்க் Future-Proof ஆனது

ஏர்டெல்லின் மொபைல் பிராட்பேண்ட் உள்கட்டமைப்பு எதிர்காலத்திற்கு ஏற்ற future-proof அம்சத்துடன் உள்ளது என்று ஏர்டெல் கூறியுள்ளது. புதிய 5G சேவையை உடனடியாக தொடங்க தயாராக உள்ள தொழில்நுட்பம் இது. நாட்டில் 5G சேவையைத் தொடங்க ஏர்டெல் முழுமையாக தயாராக இருப்பதாக நிறுவனம் கூறுகிறது.

ALSO READ: Jio vs Airtel vs Vi: 300 ரூபாய்க்குள் பல சலுகைகளை அளிக்கும் அருமையான Prepaid Plans

ஏர்டெல்லின் 5G சேவை எப்படி இருக்கிறது?

நிறுவனத்தின் 5G சேவை 4G-யை விட 10 மடங்கு வேகமாக இருக்கும். நிறுவனம் அதை ஹைதராபாத்தில் சோதனை செய்தது. 5G நெட்வொர்க்கில் ஒரு முழு நீள திரைப்படத்தை சில நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம் என்று Airtel நிறுவனம் உறுதியாகக் கூறியுள்ளது.

ஹைதராபாத்தில் வணிகமயமாக்கல் தொடங்கப்பட்டுள்ளது

ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி. கோபால் விட்டல், Airtel 5G ரெடி நெட்வொர்க் குறித்து அறிவித்தார். Airtel 5G ஹைதராபாதில் வணிக ரீதியாக துவக்கப்பட்டுள்ளது.  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்குப் பிறகு, Airtel 5G சேவையை நிறுவனம் தொடங்கக்கூடும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இதன் வேகம் வினாடிக்கு 3GB

Airtel 5G சேவையில் 3Gbps வரை பதிவிறக்கும் வேகம் கிடைக்கக்கூடும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட உடனேயே நிறுவனம் தனது 5G சேவையைத் தொடங்கக்கூடும். ஏர்டெல்லின் 5 ஜி சேவை வானொலி, கோர் மற்றும் போக்குவரத்து என அனைத்து களங்களுக்கும் இணக்கமாக இருக்கும். Airtel நிறுவனம் தனது 5 ஜி சேவையின் வீடியோக்களையும் யூடியூப்பில் (YouTube) வெளியிட்டுள்ளது.

ALSO READ: ஒரு post-க்கு கோடிகளில் பணம் பெறும் Celebrities: உங்கள் ஒரு Like, அவர்களுக்கு பெரும் Hike!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News